தோத்தாலும் பரவாயில்லை புதிய முடிவை கையில் எடுக்கவுள்ள ரோஹித் – காரணம் இதுதான்

Ind
- Advertisement -

தென்னாபிரிக்க டி20 தொடரில் இந்திய அணி ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியடைந்து தொடரை சமன் செய்தது. அதனைத் தொடர்ந்து தற்போது வங்கசதேச அணிக்கு எதிரான இந்த டி20 தொடரில் ஒரு புதிய பாணியை கையாள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகிஉள்ளது.

- Advertisement -

அதன்படி 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும் என்று எதிர்பார்த்த நிலையில் அரையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக தோல்வி அடைந்து வெளியேறியது. அதனால் கடும் விமர்சனத்தை இந்திய அணி சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை கைப்பற்றிய ஆக வேண்டும் என்று இந்திய அணி தற்போது செயல்பட்டு வருகிறது.

அதோடு இந்திய அணியின் பலம் என்னவென்றால் இந்திய மண்ணிலும் சரி வெளிநாட்டு மண்ணில் சரி சேசிங் செய்தால் இந்திய அணி சிறப்பாக விளையாடுகிறது. முதலில் பேட்டிங் செய்த தடுமாற செய்கிறது என்பதை நாம் ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். எனவே இனிவரும் போட்டிகளில் முடிந்தளவு முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என்ற முக்கிய வித்தியாசமான முடிவை எடுத்துள்ளது. அதன்படி வங்கதேச தொடரில் டாசில் வெற்றி பெற்ற பிறகு இந்திய அணி பேட்டிங் செய்யவே தீர்மானிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் ரோகித் சர்மா தலைமை ஏற்றிருக்கும் இந்த தொடரிலேயே இந்த சோதனையை செய்து பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் எந்த ஒரு கடினமான ஆடுகளமாக இருந்தாலும் முதலில் பேட்டிங் செய்ய செய்து அதிக ரன்கள் குவித்து இரண்டாவது எதிரணியை சுருட்ட முயற்சி செய்யவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்திய அணியின் பந்துவீச்சு தற்போது பலமாக உள்ளதால் அவர்களின் இந்த சோதனை வெற்றிகரமாக முடியவே அதிக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement