வங்கதேச அணி நவம்பர் மாதம் துவக்கத்தில் இந்தியா வந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

இந்த தொடரில் இந்திய அணியின் அழைப்புக்காக காத்திருந்த முன்னணி வீரரான சுரேஷ் ரெய்னாவின் பெயர் இடம் பெறவில்லை. மேலும் அவர் சில மாதங்களுக்கு முன்பு நான் இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப விரும்புகிறேன் என்னை தேர்வு செய்தால் உலகக் கோப்பை டி20 வரை என்னால் சிறப்பாக விளையாட முடியும் என்று பேட்டியும் அளித்திருந்தார்.
இந்நிலையில் அவர் இந்த தொடரிலும் தேர்வாகவில்லை. இதனால் அவருடைய டி20 வாழ்க்கை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது என்று கூற வேண்டும். நவம்பர் மாதம் 3 ஆம் தேதி துவங்க உள்ள இந்த போட்டியில் ஒரு முக்கிய சிறப்பம்சம் உள்ளது. அதாவது இதுவரை வங்கதேச அணிக்கு எதிராக டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் சுரேஷ் ரெய்னா விளையாடியுள்ளார்.

அவரில்லாமல் இந்திய அணி வங்கதேச அணியை சந்திக்கும் முதல் டி20 போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காக 2006ஆம் ஆண்டு டி20யில் அறிமுகமாகிய சுரேஷ்ரெய்னா கிட்டத்தட்ட 12 வருடங்களாக 2018வரை 78 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 1605 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



