இந்திய – இங்கிலாந்து தொடர்..! தோற்றால் மான பிரச்சனை..! ஏன் தெரியுமா..! – காரணம் இதுதான்..?

Advertisement

இந்திய அணி, இங்கிலாந்து அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இரு அணிகளுக்கும் ஒரு முக்கிய தொடராக இருக்க போகிறது.

இந்திய அணி தற்போது டெஸ்ட் தர வரிசையில் முதல் இடத்திலும் ஒரு நாள் தர வரிசையில் 2வது இடத்திலும் டி20 தர வரிசையில் 2வது இடத்திலும் இருக்கிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நாளை(ஜூலை 12) துவங்க இருக்கிறது.

இந்த தொடர் இந்திய அணிக்கு ஒரு முக்கியமான தொடராக கருதபடுக்கிறது. தற்போதய நிலவரப்படி சர்வதேச ஒரு நாள் தரவரிசையில் இங்கிலாந்து அணி 48 போட்டிகளில் விளையாடி 6053 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணிக்கு அடுத்து 45 போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்திய அணி 5492 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
dhoni
மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி இந்திய அணி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றால், தொடரை கைப்பற்றுவதோடு சர்வதேச ஒரு நாள் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து அணியை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடிக்கும். எனவே, நாளை நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணி வென்றுவிட்டால் இந்திய அணி தரவரிசை முதல் இடத்தை பிடிக்கும் வாய்ப்பை இழந்து விடும். இதனால் இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Advertisement