இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அக்டோபர் 10ஆம் தேதி டெல்லியில் துவங்கியது. அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 518/5 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 175, கேப்டன் சுப்மன் கில் 129*, சாய் சுதர்சன் 87 ரன்கள் எடுத்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ்க்கு அதிகபட்சமாக ஜோமேல் வேரிக்கன் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
அடுத்ததாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸை 248 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா 270 ரன்கள் முன்னிலை பெற்றது. அதிகபட்சமாக அலிக் அதனாஸ் 41 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணிக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3, குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்ததாக மீண்டும் பேட்டிங் செய்யுங்கள் என்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்தியா ஃபாலோ ஆன் கொடுத்தது.
சவாலைக் கொடுத்த டெய்ல் எண்டர்கள்:
அதனால் மீண்டும் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ்க்கு சந்தர்பால் 10, அலிக் அதனாஸ் 7 ரன்களில் அவுட்டானார்கள். ஆனால் அடுத்து வந்த சாய் ஹோப் 66*, ஜான் கேம்பல் 87* ரன்கள் அடித்ததால் 3வது நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 173/2 ரன்களை எடுத்துள்ளது. முன்னதாக இப்போட்டியில் 175/8 என சரிந்த வெஸ்ட் இண்டீஸை 200 ரன்களுக்குள் இந்தியா சுருட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அப்போது நங்கூரமாக விளையாடிய ஆண்டர்சன் பிலிப் 24*, ஜெய்டன் சீல்ஸ் 13, காரி பியர்ரே 23 ரன்கள் எடுத்ததால் வெஸ்ட் இண்டீஸ் 248 ரன்களை குவித்து அசத்தியது. அப்படி டெயில் எண்டர்கள் சிறப்பாக விளையாடும் அளவுக்கு 3வது நாளில் பிட்ச் பவுலர்களுக்கு பெரிதாக சாதகமாக இல்லாமல் இருந்தது. அதனால் இந்தியா மீண்டும் பேட்டிங் செய்து 500க்கும் மேற்பட்ட ரன்களை இலக்காக நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
சுத்தரிக்காத இந்தியா:
ஆனால் அப்போது இன்னிங்ஸ் வெற்றி பெறலாம் என்ற எண்ணத்துடன் சுப்மன் கில் – கெளதம் கம்பீர் வெஸ்ட் இண்டீஸ்க்கு ஃபாலோ ஆன் கொடுத்தனர். அப்படி செய்வதால் இந்திய அணியின் பணிச்சுமையும் குறையும் என்று அவர்கள் கருதினர். உண்மையில் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் முதல் இன்னிங்ஸ் 134 ஓவர்கள் வீசினர். ஆனால் இந்திய பவுலர்கள் வெறும் 81 ஓவர்கள் மட்டுமே பந்து வீசினார்கள்
இதையும் படிங்க: 18 மாசம் கழிச்சு 5 விக்கெட்ஸ் எடுக்க இதான் என் திட்டம்.. இதை செஞ்சு வெ.இஸை நாளை மடக்குவோம்.. குல்தீப் பேட்டி
எனவே இங்கே இந்திய அணி பணிச்சுமையை நிர்வகிப்பதற்கு எதுவுமே இல்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தியா ஃபாலோ ஆன் கொடுத்தது இதுவரை சரியான முடிவாகவும் தெரியவில்லை. ஏனெனில் தற்சமயத்தில் 97 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ள வெஸ்ட் இண்டீஸ் கைவசம் 8 விக்கெட்டுகள் இருக்கிறது. அதனால் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளது.



