
பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் துபாயில் தங்களுடைய போட்டிகளை விளையாடும் இந்திய அணி முதல் போட்டியில் வங்கதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதனால் இத்தொடரை வெற்றிகரமாக துவங்கியுள்ள இந்தியா 2013க்குப்பின் கோப்பைகளை வெல்லும் முனைப்புடன் அடுத்தப் போட்டியில் பாகிஸ்தானை சந்திக்க தயாராகி வருகிறது.
முன்னதாக அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேசம் 229 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 41, சுப்மன் கில் 101*, ராகுல் 41* ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற வைத்தார்கள். இருப்பினும் அந்தப் போட்டியில் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஏமாற்றத்தைக் கொடுத்ததால் 144-4 என ஒரு கட்டத்தில் இந்தியா தடுமாறியது.
அப்போது சில இந்திய ரசிகர்கள் பதற்றமாக இருந்தார்கள். ஆனால் அந்த தருணத்தில் இந்தியா தோற்கும் என்று தாமும் ரசிகர்களும் 1 சதவீதம் கூட பயப்படவில்லை என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்தார். இருப்பினும் வர்ணனையாளராக இருப்பதன் காரணமாக தம்மை அந்த குறிப்பிட்ட நேரத்தில் சில வார்த்தைகள் வங்கதேசத்தை புகழ வைத்ததாகவும் சேவாக் கூறியுள்ளார்.
அது பற்றி கிரிக்பஸ் இணையத்தின் நேரலையில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய ரசிகர்களிடம் ஏதேனும் பதற்றம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் இது வங்கதேசம். ஆனால் அவர்களை நீங்கள் ஒரு அற்புதமான அணி போல என்னையே கொஞ்சம் பாராட்ட வைத்து விட்டீர்கள். வங்கதேசத்திற்கு பயப்படுகிறீர்களா? நான் விளையாடும் போதும் அவர்களுக்கு எதிராக பயப்பட்டதில்லை”
“எனவே இன்று நான் ஏன் வர்ணனையாளர்கள் அறையில் பயப்பட்டிருக்க வேண்டும். அது வங்கதேசம் அணி. ஆஸ்திரேலியா அல்லது கணிக்க முடியாமல் இருப்பதற்கு பாகிஸ்தான் அணி கிடையாது. எனவே இந்தப் போட்டியில் இந்திய ரசிகர்களின் இதயத்தில் வங்கதேசத்தை நினைத்து ஒரு சதவீதம் கூட பயம் இருந்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை”
இதையும் படிங்க: அந்த பாரத்தை சுமக்காம ரோஹித்தை பாத்து விளையாடுங்க.. ஸ்பின்னர்களிடம் தடுமாறும் கோலிக்கு.. கும்ப்ளே அட்வைஸ்
“அது மிகவும் எளிதான போட்டி. கடினமாக விளையாடும் நாம் அதை 4 ஓவர்கள் மீதம் வைத்து முடித்தோம். கில் பொறுமையுடன் மெதுவாக விளையாடினார். ஒருவேளை ரோஹித், கோலி, ஸ்ரேயாஸ் ஆகியோர் நான் நிலைத்து விளையாடி இருந்தால் 35 ஓவரிலேயே அந்தப் போட்டி முடிந்திருக்கும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து பிப்ரவரி 23ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ளது.