கடந்த 15 ஆண்டுகளில் இதுவே முதல் முறை. இவர் இருந்திருந்தால் இந்தியா ஜெயித்திருக்கும் – விவரம் இதோ

MSdhoni

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 255 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் ஷிகர் தவான் 74 ரன்கள் குவித்தார்.

Warner

அதனைத் தொடர்ந்து 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய பந்துவீச்சாளர்களை விளாசி 37.4 ஓவர்களில் 258 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியின் வீரர்களான வார்னர் 128 ரன்களும், பின்ச் 110 ரன்களும் குவித்தனர். ஆட்டநாயகனாக வார்னர் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்தத் தோல்வியின் மூலம் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் கண்ட அரிதான தோல்வியாக இது பதிவாகி உள்ளது. இதற்கு முன்னர் கவாஸ்கர் சச்சின், கங்குலி, டிராவிட் மற்றும் கவாஸ்கர் ஆகியோரின் தலைமையில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவுவது தற்போது விராட் கோலி தலைமையில் 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

dhoni

தோனி மற்றும் கபில் தேவ் ஆகியோர் தலைமையில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது இல்லை என்றும் கூறியிருந்தனர். மேலும் அதிக அளவு இந்த போட்டி குறித்து கூறியதில் தோனி இருந்திருந்தால் இந்திய அணியை கரை சேர்த்திருப்பார் என்பது தான் ரசிகர்களின் கருத்துகளாக உள்ளது.

- Advertisement -

Dhoni 1

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தோனி சிறப்பாக விளையாடுவார் என்றும் இந்திய அணியின் போக்கை நிச்சயம் தோனி ஒருவரால் மாற்றி அமைத்து இருக்க முடியும் என்றும் தோனியின் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் நேற்றைய ஆட்டத்தில் தோனி இல்லாததே இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்றும் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.