ஆஸ்திரேலிய அணிக்கு அணிக்கு எதிராக தன்னுடைய சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் ரோகித் தலைமையில் இரண்டாவது போட்டியில் சுமாராக விளையாடிய இந்தியாவை தோற்கடித்த ஆஸ்திரேலியா தொடரை சமன் செய்துள்ளது.
அந்தப் போட்டியில் இந்தியாவின் பேட்டிங், பவுலிங் சுமாராக இருந்தது தோல்வியை கொடுத்தது. குறிப்பாக பந்து வீச்சில் ஜஸ்ப்ரித் பும்ரா 4 விக்கெட்டுகளை எடுத்து ஆஸ்திரேலியாவுக்கு வழக்கம் போல சவால் கொடுத்தார். ஆனால் சிராஜ் விக்கெட்டுகளுக்கு நிகராக ரன்களை வாரி வழங்கிய நிலையில் ஹர்ஷித் ராணா ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களிடம் அடி வாங்கினார்.
ஒரு பிளேயரை நம்பி:
அந்த வகையில் பந்து வீச்சில் இந்தியா பும்ராவை மட்டுமே முழுமையாக நம்பியிருக்கிறது என்றே சொல்லலாம். அவரும் இரண்டாவது போட்டியில் லேசான காயத்தை சந்தித்தார். அதனால் இரண்டாவது இன்னிங்சில் 120 – 130 கி.மீ வேகத்திற்குள் ஒரே ஒரு ஓவர் மட்டும் பந்து வீசியது இந்திய ரசிகர்களுக்கு கவலையை கொடுத்தது. இந்நிலையில் இந்திய அணி இப்படி ஒரு பவுலரை மட்டும் நம்பியிருப்பதை தாம் இதற்கு முன் பார்த்ததில்லை என்று முகமது கைஃப் கவலை தெரிவித்துள்ளார்.
அதனால் ஒருவேளை ஜஸ்ப்ரித் பும்ரா காயத்தை சந்தித்தால் இத்தொடரில் இந்தியா கண்டிப்பாக தோற்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி தனது ட்விட்டரில் ஃகைப் பேசியது பின்வருமாறு. “1 – 1 என்ற கணக்கில் தொடர் சமனில் மட்டுமே இருப்பதால் நாம் பதற்றமுடைய தேவையில்லை. நாம் ஒரு தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளோம். எனவே அனைத்தையும் தோற்றது போல் நடந்து கொள்ள வேண்டியதில்லை”
முக்கியமான பும்ரா:
“அடுத்த போட்டிகளில் வெல்வதற்கு நம்முடைய திட்டமிடல் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும். ரோஹித் சர்மா கேப்டனாக எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. ஜஸ்ப்ரித் பும்ராவால் நீண்ட நேரம் பந்து வீச முடியாது. அவர் மட்டுமே நம்முடைய ஒற்றை பவுலர். மொத்த அணியும் இப்படி ஒரு வீரரை சார்ந்திருப்பதை நான் எப்போதும் பார்த்ததில்லை”
இதையும் படிங்க: ஃபார்முக்கு திரும்ப இதை செய்ங்க.. இந்தியாவின் வெற்றி உறுதி.. ரோஹித்துக்கு புஜாரா, ஹர்பஜன் அட்வைஸ்
“அஸ்வின் விளையாடவில்லை. ஜடேஜாவும் விளையாடவில்லை. அதனால் பும்ரா காயத்தை சந்தித்தால் இந்தத் தொடரை வெல்வதை பற்றி நாம் மறந்து விட வேண்டும். அதனாலேயே அவருக்கு ரோஹித் குறைந்த ஓவர்களை கொடுக்கிறார். எனவே பும்ராவை நாம் கவனித்துக் கொள்ள வேண்டும். அவர் இந்தத் தொடரில் காயத்தை சந்தித்து விடக்கூடாது” என்று கூறினார்.



