இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மாட்டிறைச்சி.! BCCI வெளியிட்ட சர்ச்சை தகவல்!

team india
- Advertisement -

இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி படு தோல்வியடைந்ததால் இந்திய ரசிகர்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் இரண்டாவது டெஸ்டின் மூன்றாவது நாளின் உணவு இடைவெளியில் இந்தியர்கள் உண்ணும் உணவு பட்டியலில் மாட்டிறைச்சி இடம்பெற்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாவது டெஸ்டின் போது கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு பட்டியில் ஒன்று வெளியானது. அதில் இந்தியர்கள் உண்ணும் உணவு பட்டியலில் மாட்டிறைச்சி இடம்பெற்றிருந்ததால் சமூக வலைத்தளத்தில் விவாதமாக மாறியுள்ளது. ஒரு சில தரப்பினர் சூப், சிக்கன், தால் என்று குறிப்பிடப்பட்டுள்ள அந்த உணவு பட்டியலில் எப்படி மாட்டிறச்சி வந்தது. இந்தியர்கள் உண்ணும் உணவு பட்டியலில் மாட்டிறைச்சி எப்படி அனுமதிக்கலாம் ? என்று கடும் விமர்சனத்தை வைத்து வருகின்றனர்.

- Advertisement -

மேலும் சில தரப்பினரோ, மாட்டிறைச்சி இந்திய வீரர்களுக்காக மட்டும் பரிமாறபட பட்டியலிடபடவில்லை. இங்கிலாந்து வீரக்ளுக்கும் , இந்திய வீரர்களுக்கும் பொதுவாகத்தான் அந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, மாட்டிறைச்சியை உண்ண வேண்டாம் என்று விரும்பும் வீரர்கள் மற்ற உணவை உண்ண போகிறார்கள் இதில் என்ன தவறு என்று விமர்சித்து வருகின்றனர்.

மத்தியில் பா.ஜ.க. ஆட்சியமைத்த பிறகு, இந்தியாவில் பசுவதை குறித்த சர்ச்சைகள் தொடர்ந்து வெடித்து வந்தது. ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பசுக்களை இறைச்சிக்காகக் கொண்டுசென்றதாகக் கூறி, பல அப்பாவி பொதுமக்கள், பசுக் காவலர்கள் என்ற பெயரில் வலம் வரும் குண்டர்களால் கொலைசெய்யப்பட்டனர். மேலும், அண்மையில் மாட்டிறைச்சியைச் சந்தையில் விற்க மத்திய அரசு தடை விதித்தது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு கண்டனங்கள் முன்வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement