அந்த சுற்றிலாவது காற்று அடிக்கனும்.. 11க்கு 0.. அதிர்ஷ்டம் இல்லாததால் இந்தியா பரிதாப உலக சாதனை

Toss India
- Advertisement -

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் துவங்கியுள்ளது. அதில் இந்தியா தங்களுடைய போட்டிகளை துபாய் மண்ணில் விளையாடுகிறது. 2013க்குப்பின் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் இந்தத் தொடரில் விளையாடும் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

மறுபுறம் டாஸ் கிடைக்கவில்லை என்றாலும் நாங்களும் முதலில் பௌலிங் செய்யவே விரும்பியதாக இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். ஆனால் இதையும் சேர்த்து கடைசியாக விளையாடிய 11 ஒருநாள் போட்டிகளிலும் இந்தியா டாஸ் வீசுவதில் தோல்வியே சந்தித்துள்ளது. கடைசியாக 2023 உலகக் கோப்பை செமி ஃபைனலில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா டாஸ் வென்றது.

- Advertisement -

அதிர்ஷ்டம் இல்லயே:

அதன் பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஃபைனலில் டாஸ் வீசுவதில் தோல்வியை சந்தித்த இந்தியா கடைசியில் கோப்பையையும் கோட்டை விட்டதை மறக்க முடியாது. அதன் பின் தென் ஆப்பிரிக்கா, இலங்கை தொடர்களில் டாஸ் வீசுவதில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அப்படியே சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரிலும் இந்தியா ஒரு டாஸ் கூட வெல்லவில்லை.

அந்த வகையில் கடைசியாக விளையாடிய 11 ஒருநாள் போட்டிகளில் இந்தியா ஒரு டாஸ் கூட வெல்லவில்லை. இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அதிகப் போட்டிகளில் டாஸ் தோல்வியை சந்தித்த அணி என்ற பரிதாபமான உலக சாதனையை இந்தியா சமன் செய்துள்ளது. இதற்கு முன் 2011 – 2013 காலகட்டங்களில் நெதர்லாந்து அணியும் இதே போல 11 ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக டாஸ் வெல்லவில்லை.

- Advertisement -

முக்கிய நேரத்தில் வேண்டும்:

அதை தற்போது இந்தியா சமன் செய்துள்ளது. இதற்கு அதிர்ஷ்டம் இல்லாதது முக்கிய காரணம் என்று சொல்லலாம். அதே சமயம் இது குரூப் சுற்று என்பதால் டாஸ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை. ஆனால் செமி ஃபைனல், ஃபைனல் போன்ற நாக் அவுட் சுற்றுப் போட்டிகளில் எதிரணி பலமாக இருக்கும் என்பதால் டாஸ் என்பது வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.

இதையும் படிங்க: விரும்பியதை வங்கதேசமே கொடுத்துட்டாங்க.. அர்ஷ்தீப்பை கழற்றி விட்ட ரோஹித்.. இந்திய பிளேயின் லெவன் இதோ

அதற்கு 2023 உலகக்கோப்பை ஃபைனலை எடுத்துக்காட்டாக சொல்லலாம். எனவே நாக் அவுட் சுற்றிலாவது டாஸ் எனும் அதிர்ஷ்ட தேவதை கொஞ்சம் இந்தியாவின் பக்கம் வரவேண்டும் என்பதே இங்குள்ள ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து வங்கதேசத்தை தெறிக்க விடும் வகையில் இந்தியா பௌலிங் செய்து வருகிறது.

Advertisement