WTC Final : இந்தியா ஜெயிக்க வாய்ப்பில்ல ராஜா, முதல் நாளிலேயே லென்த்துல தப்பு பண்ணிட்டீங்க – அடித்துக்கூறும் பாண்டிங்

Ricky Ponting
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றியை நோக்கி பயணிக்க துவங்கியுள்ளது. ஜூன் 7ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா மிகச்சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 469 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 163 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களும் எடுக்க சுமாராக செயல்பட்ட இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 15, கில் 13, விராட் கோலி 14, புஜாரா 14 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். அதனால் 71/4 என ஆரம்பத்திலேயே சரிந்த இந்தியாவை காப்பாற்ற போராடிய ரவீந்திர ஜடேஜாவும் 48 ரன்களில் அவுட்டானார். அதன் காரணமாக 2வது நாள் முடிவில் 151/5 ரன்களை எடுத்து திணறும் இந்தியாவுக்கு களத்தில் ரகானே 29* பரத் 5* ரன்களுடன் உள்ளனர்.

- Advertisement -

தோல்வி நிச்சயம்:
மொத்தத்தில் கோப்பையை வெல்ல போராடும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா தற்போது ஃபாலோ ஆனை தவிர்ப்பதற்கே 119 ரன்கள் எடுக்க வேண்டும் என்று கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது இந்திய ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக இந்த போட்டியில் வானிலையை கருத்தில் கொண்டு டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து ஆஸ்திரேலியா போல பெரிய ரன்களை எடுத்து ஆரம்பத்திலேயே அழுத்தத்தை எதிரணி பக்கம் திருப்பும் முடிவை எடுக்க தவறிய ரோகித் சர்மா உலகின் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் அஸ்வினை கழற்றி விட்டதற்காக கங்குலி போன்ற நிறைய முன்னாள் வீரர்களின் விமர்சனங்களை சந்தித்தார்.

இந்நிலையில் அந்த 2 முடிவுகளை தாண்டி இப்போட்டியின் முதல் மணி நேரத்திலேயே ஃபுல் லென்த் பந்துகளை வீசியிருந்தால் ஆஸ்திரேலியா 4 – 5 விக்கெட்டுகளை இழந்திருக்கும் என்று தெரிவிக்கும் ரிக்கி பாண்டிங் அதை செய்யாத இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அதிகமான ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசி ஆரம்பத்திலேயே பெரிய பின்னடைவை ஏற்படுத்தியதாக கூறியுள்ளார். அதனால் டாஸ் வென்று முதலில் பந்து வீசி வெற்றி காணலாம் என்று நினைத்த ரோகித் சர்மாவின் திட்டத்தை இந்திய பவுலர்கள் வீணடித்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ஐசிசி இணையத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இப்போட்டியின் முதல் நாளிலேயே அதிகமான ஷார்ட் பந்துகளை வீசி இந்தியா தங்களுக்கு தாங்களே கீழே தள்ளிக் கொண்டார்கள் என்று நினைக்கிறேன். குறிப்பாக மேகமூட்டத்துடன் கூடிய வானிலையில் புதிய டுக் பந்துகளில் நீங்கள் ஃபுல்லர் லென்த்தை வீசி பந்தை பின்புறத்தில் ட்ரிவன் செய்திருக்க வேண்டும். அந்த வகையில் முதல் மணி நேரத்திலேயே 3 – 4 விக்கெட்டுகளை எதிர்பார்த்த அவர்களுக்கு 2 மட்டுமே கிடைத்தது என்பது ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக அமைந்தது”

“மேலும் இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசும் முடிவை ரோகித் சர்மா எடுத்து நிறைய விமர்சனங்களை சந்தித்துள்ளார். ஆனால் அது அவருடைய சொந்த முடிவல்ல. ராகுல் டிராவிட்டுடன் போட்டி துவங்குவதற்கு முதல் நாளன்று மைதானத்திற்கு வந்து நீண்ட நேரம் பேசிய அவர் டாஸ் வென்றால் என்ன செய்யலாம் என்ற முடிவை எடுத்தார். அந்த வகையில் டாஸ் வென்று 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கலாம் என்று அவர்கள் எடுத்த முடிவுக்கு இதுவரை எந்த பலனும் கிடைக்கவில்லை” என்று கூறினார்.

- Advertisement -

அத்துடன் நேற்றைய 2வது நாள் உணவு இடைவெளியின் போது “எப்படியாவது இப்போட்டியில் இந்தியா கம்பேக் கொடுக்கும் என்று நான் நினைக்கிறேன்” என ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ஜேம்ஸ் பேரிஷா தெரிவித்தார். அப்போது அதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிவித்த ரிக்கி பாண்டிங் ஆஸ்திரேலியா தான் வெல்லும் என்று உறுதியாக தெரிவித்தது பின்வருமாறு.

இதையும் படிங்க:WTC Final : ஆஸி பவுலர்கள் பந்தை சேதப்படுத்தி இந்திய பேட்டிங்கை காலி பண்ணிட்டாங்க, முன்னாள் பாக் வீரர் ஆதாரத்துடன் குற்றசாட்டு

“இல்லை. இந்தியா இப்போட்டியில திரும்பி வரவில்லை. உள்வட்டத்திற்கு வெளியே நிறைய காய்ந்த பகுதிகள் உள்ளன. மேலும் பிட்ச்சில் சமமற்ற பவுன்ஸ் இருப்பதுடன் இன்னும் லேசான வேகம் இருக்கிறது. எனவே இங்கிருந்து நிச்சயமாக இந்தியா வெற்றி பெற முடியாது” என்று கூறினார்.

Advertisement