- Advertisement -
இந்திய கிரிக்கெட்

எல்லா நாளும் பும்ரா வரமாட்டாரு.. இதை செஞ்சா அவங்களே வெச்சே ஜெய்க்கலாம்.. இந்தியாவுக்கு ஹர்பஜன் அட்வைஸ்

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடரில் விளையாட உள்ளது. பாகிஸ்தானில் நடைபெற உள்ள அந்தத் தொடரில் இந்தியா தங்களுடைய போட்டிகளை துபாயில் விளையாட உள்ளது. அந்தத் தொடருக்கு முன்பாக இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரை 3 – 0 என்ற கணக்கில் வென்ற இந்தியா சாம்பியன்ஸ் கோப்பையை வெல்ல தயாராக இருக்கிறோம் என்பதை எதிரணிகளுக்கு காண்பித்துள்ளது.

இருப்பினும் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா அந்தத் தொடரில் காயத்தால் விளையாட மாட்டார் என்பது இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை பாதியாக குறைக்கிறது என்றே சொல்லலாம். ஏனெனில் தற்சமயத்தில் உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் அவர் 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு தொடர்நாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

பும்ரா இல்லாமல்:

அந்த வகையில் நல்ல ஃபார்மில் இருக்கும் பும்ரா இந்திய பவுலிங் துறையின் முதுகெலும்பாக பார்க்கப்படுகிறார். இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா எல்லா நாளும் இருக்க மாட்டார் என்பதால் அவர் இல்லாமல் விளையாடி வெற்றி பெற இந்திய அணி கற்றுக்கொள்ள வேண்டும் என ஹர்பஜன் சிங் அறிவுறுத்தியுள்ளார். அதற்கு ஷமி, குல்தீப், ஜடேஜா, அர்ஷ்தீப் போன்ற பவுலர்கள் சிறப்பாக செயல்படுவது முக்கியம் என்றும் ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.

இது பற்றி ஹர்பஜன் பேசியது பின்வருமாறு. “இப்போதும் இந்தியா சாம்பியன்ஸ் கோப்பையை வெல்லக்கூடிய ஒரு அணியாக இருப்பதாகவே நான் நம்புகிறேன். மிகப்பெரிய சக்தியான பும்ரா போட்டிகளை வென்று கொடுக்கக் கூடியவர். ஆனால் அவர் இல்லாமலும் ஷமி, குல்தீப், ஜடேஜா, அர்ஷ்தீப் போன்ற நிறைய அனுபவமிக்க வீரர்கள் நம்மிடம் உள்ளார்கள்”

- Advertisement -

இந்தியாவால் முடியும்:

“எனவே திறன் இருப்பதால் இப்போதும் இந்தியா கோப்பையை வெல்லக்கூடிய அணி. ஆனால் அதற்கு அவர்கள் கோப்பையை வெல்லக்கூடிய அணியைப் போல் விளையாட வேண்டும். ரோஹித் சர்மா ஃபார்முக்கு வந்துள்ளார். விராட் கோலி, ஸ்ரேயாஸ், கில் ஆகியோர் கடந்த இங்கிலாந்து தொடரில் ரன்கள் அடித்தார்கள். அந்த வகையில் பேட்டிங், பவுலிங் துறைகள் நன்றாக செயல்படுகின்றன”

இதையும் படிங்க: 3 – 4 வருஷ உழைப்பு.. இதையாச்சும் சொன்னிங்களே.. என் மேலயும் தப்பு இருக்கு.. கருண் நாயர் ஆதங்க நம்பிக்கை

“எதிராணிக்கு கடைசிக்கட்ட ஓவர்களில் 2 – 3 விக்கெட்டுகளை மட்டுமே கைவசம் உள்ள சூழ்நிலைகளில் கணிசமான ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் ஏற்படும் போது தான் ஜஸ்ப்ரித் பும்ரா இல்லாததை நாம் உணர்வோம். ஆனால் நீங்கள் கோப்பையை வெல்ல விரும்பினால் பும்ரா இல்லாமல் விளையாட கற்றுக் கொள்ள வேண்டும்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் வங்கதேசத்தை பிப்ரவரி 20ஆம் தேதி எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -