ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி 2007ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் பங்கேற்றது அப்போது வங்கதேச அணியிடம் தோற்று லீக் சுற்றிலேயே இந்திய அணி வெளியேறியதால் அப்போது இந்திய அணி மீது மிகுந்த விமர்சனங்கள் எழுந்தன.
This day, in 2⃣0⃣0⃣7⃣#TeamIndia were crowned World T20 Champions ???????????? pic.twitter.com/o7gUrTF8XN
— BCCI (@BCCI) September 24, 2019
அப்போது புதிய கேப்டனாக தோனி டி20 போட்டிகளில் அறிமுகமானார். தோனி கேப்டனாக அறிமுகமான அந்த வருடத்திலேயே முதன் முதலில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. இதே நாளில் அதாவது செப்டம்பர் 24 2007 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு முன்பாக தோனி ஒரு தலைவனாக முதல் வெற்றியை பெற்று இந்திய அணிக்கு பரிசாக தந்தார்.
அதன் பிறகு 2011 உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை என ஐசிசியின் அனைத்து கோப்பைகளும் வென்ற ஒரே கேப்டன் தோனி என்பது நாம் அறிந்ததே. இந்நிலையில் இன்று இந்த சிறப்பான நாளை பி.சி.சி.ஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டாடியுள்ளது. மிகப்பெரிய கேப்டனாக தோனி உருவெடுத்த தினம் இன்று தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.