பாகிஸ்தானை மிஞ்சி 100 வெற்றிகளை பெற்று இந்தியா புதிய சாதனை ! 2வது டி20 போட்டியில் நிகழ்ந்த சாதனைகளின் பட்டியல் இதோ

IND
- Advertisement -

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் உலகப் புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி 16ஆம் தேதியன்று துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்தது.

Pooran

- Advertisement -

இதை அடுத்து இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 2வது போட்டி நேற்று கொல்கத்தாவில் துவங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

இந்தியா வெற்றி:
இதை அடுத்து களமிறங்கிய இந்தியாவுக்கு இஷான் கிசான் 2, கேப்டன் ரோஹித் சர்மா 19 என தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 8 ரன்களில் நடையை கட்டினார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாக பேட்டிங் செய்த நட்சத்திர வீரர் விராட் கோலி 41 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். கடைசி நேரத்தில் ரிஷப் பண்ட் 28 பந்துகளில் 52* ரன்களும் வெங்கடேஷ் ஐயர் 18 பந்துகளில் 33 ரன்களும் அடுத்து அபாரமான பினிஷிங் செய்ததால் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்த இந்தியா 186 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ரஸ்டன் சேஸ் 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

IND

இதை அடுத்து 187 என்ற இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்க வீரர்கள் கைல் மேயேர்ஸ் 9, பிரண்டன் கிங் 22 என குறைந்த ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான தொடக்கத்தை கொடுத்தனர். இருப்பினும் அடுத்து வந்த நிக்கோலஸ் பூரான் கடந்த போட்டியைப் போலவே மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து 41 பந்துகளில் 62 ரன்களை விளாசி முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார். அவருடன் மறுபுறம் சிறப்பாக பேட்டிங் செய்த ரோமன் போவல் 36 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் உட்பட 68* ரன்கள் எடுத்த போதிலும் வெஸ்ட்இண்டீஸ் அணியால் வெற்றி பெற முடியவில்லை.

- Advertisement -

100வது வெற்றி:
குறிப்பாக 19வது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே கொடுத்த புவனேஸ்வர் குமார் இந்தியாவின் வெற்றியை உறுதி படுத்தினார். அதன் பின் ஹர்ஷல் படேல் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட்ட போது போவெல் – பொல்லார்ட் ஜோடியால் 16 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் வாயிலாக 8 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற இந்தியா 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2 – 0* என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக பெற்ற இந்த வெற்றி சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா பெறும் 100வது வெற்றியாகும்.

IND

சாதனைகளின் பட்டியல்:
1. இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 100 வெற்றிகளை பதிவு செய்த 2வது அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது. 100 டி20 வெற்றிகளைப் பெற்ற முதல் அணியாக ஏற்கனவே பாகிஸ்தான் சாதனை படைத்துள்ளது என்றாலும் அதிவேகமாக 100 வெற்றிகளை பெற்ற அணி என்ற புதிய சாதனையை இந்தியா படைத்தது.

- Advertisement -

டி20 கிரிக்கெட் வரலாற்றில் 163 போட்டிகளில் பங்கேற்ற பாகிஸ்தான் அதில் 100 வெற்றிகளை பெற்றது. ஆனால் இந்தியா வெறும் 155 போட்டிகளிலேயே 100 வெற்றிகளை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.

chahal

2. கடந்த 2006ஆம் ஆண்டு முதல் முறையாக டி20 போட்டியில் களமிறங்கிய இந்தியாவிற்கு வீரேந்திர சேவாக் கேப்டன்ஷிப் செய்தார். அதைத் தொடர்ந்து இந்தியா பதிவு செய்த 50வது டி20 வெற்றியின் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டார். தற்போது இந்தியா பதிவு செய்துள்ள 100வது டி20 வெற்றியைப் பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெருமையை பெற்றுள்ளார்.

- Advertisement -

3. இந்த போட்டியில் அரைசதம் அடித்த விராட் கோலி டி20 கிரிக்கெட் வரலாற்றில் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக சதங்கள் (6 அரை சதங்கள்) அடித்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். 2வது இடத்தில் ரோகித் சர்மா 5 அரைச் சதங்களுடன் உள்ளார்.

rohith

4. அதேபோல் இந்த போட்டியில் அரை சதம் அடித்த விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளில் அதிக அரை சதங்கள் அடித்த வீரர் என்ற ரோஹித் சர்மாவின் உலக சாதனையை சமன் செய்துள்ளார். டி20 போட்டிகளில் அதிக அரை சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியல் இதோ:
1. விராட் கோலி/ரோஹித் சர்மா : 30*
2. பாபர் அசாம் : 26
3. டேவிட் வார்னர்/மார்ட்டின் கப்டில் : 22

5. முன்னதாக இந்தப்போட்டியில் பவர் பிளே ஓவரில் தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா 18 பந்துகளில் 19 ரன்கள் அடித்தார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக பவர் பிளே ஓவர்களில் 300 ரன்களை அடித்த முதல் வீரர் என்ற சூப்பர் சாதனையை அவர் படைத்துள்ளார். இதே பட்டியலில் 2வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (269 ரன்கள்) 3வது இடத்தில் இங்கிலாந்தின் அலெஸ் ஹேல்ஸ் (206 ரன்கள்) ஆகியோர் உள்ளார்கள்.

Advertisement