162க்கு ஆல் அவுட்.. தீப்தி, ரேணுகா வரலாற்று சாதனை.. வெ.இ அணியை ஒய்ட்வாஷ் செய்த இந்திய மகளிரணி

IND vs WI
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் இந்திய மகளிரணி வென்றது. அடுத்ததாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் இந்தியா வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. 3வது போட்டி வதோதராவில் டிசம்பர் 27ஆம் தேதி நடைபெற்றது.

அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு துவக்க வீராங்கனைகள் குயினா ஜோசப், கேப்டன் ஹைய்லே மேத்தியூஸ் ஆகியோரை ரேணுகா சிங் அடுத்தடுத்து முதல் ஓவரிலேயே டக் அவுட்டாக்கினார். இதன் வாயிலாக ஒரு மகளிர் ஒருநாள் போட்டியில் எதிரணியின் 2 துவக்க வீராங்கனைகளையும் டக் அவுட் செய்த முதல் இந்திய வீராங்கனை என்ற தனித்துவமான வரலாற்று சாதனையை ரேணுகா படைத்தார்.

- Advertisement -

அபார பவுலிங்:

அவருக்கு முன் வேறு எந்த இந்திய வீராங்கனைகளும் எதிரணியின் துவக்க வீராங்கனைகளை டக் அவுட் செய்ததில்லை. அடுத்து வந்த டோட்டினையும் அவர் 5 ரன்களில் அவுட்டாக்கியதால் 9-3 என வெஸ்ட் இண்டீஸ் ஆரம்பத்திலேயே தடுமாறியது. அப்போது மிடில் ஆர்டரில் சேமின் கேம்ப்பல் 46, சின்லே ஹென்றி 61 ரன்கள் எடுத்து போராடி ஆட்டமிழந்தனர்.

இறுதியில் தீப்தி சர்மா சுழலில் அலியா அலென் 21 ரன்கள் எடுத்தும் 38.5 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 162 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் செய்தது. இந்திய அணிக்கு தீப்தி சர்மா 6, ரேணுகா சிங் 4 விக்கெட்டுகளை எடுத்தார்கள். இதையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் மொத்தம் 3 முறை தீப்தி சர்மா தனது கேரியரில் 5க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

- Advertisement -

இந்தியா வெற்றி:

அதன் வாயிலாக மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை 5 விக்கெட் ஹால் எடுத்த இந்திய வீராங்கனை என்ற சாதனையை தீப்தி படைத்துள்ளார். இதற்கு முன் ஏக்தா பிஸ்த், நீட்டு டேவிட், ஜூலன் கோஸ்வாமி தலா 2 முறை எடுத்ததே முந்தைய சாதனை. பின்னர் 163 ரன்களை துரத்திய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா 4, பிரித்திகா ராவல் 18, ஹர்லின் தியோல் 1 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள்.

இதையும் படிங்க: விராட் கோலி செய்த தவறால் சதம் அடிக்காமல் ஏமாற்றத்துடன் வெளியேறிய ஜெய்ஸ்வால் – என்ன நடந்தது?

அதனால் 55-3 என தடுமாறிய இந்திய அணிக்கு மிடில் ஆர்டரில் கேப்டன் ஹெர்மன்பிரீத் 32, ஜெமிமா 29, தீப்தி சர்மா 39*, ரிச்சா கோஸ் 23* ரன்கள் எடுத்தார்கள். அதன் காரணமாக 28.2 ஓவரில் 167-5 ரன்களை எடுத்த இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 3 – 0 (3) என்ற கணக்கில் ஒய்ட்வாஷ் செய்து இத்தொடரின் கோப்பையை வென்றது. வெஸ்ட் இண்டீஸ் போராடியும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

Advertisement