23 வருடமாக இந்தியா 10க்கு 10 உலக சாதனை வெற்றி.. வெ.இ அணியை ஒய்ட்வாஷ் செய்து அசத்தல்

IND vs WI
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இந்தியா தங்களது சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. அத்தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அடுத்ததாக 2வது போட்டி அக்டோபர் 10ஆம் தேதி தலைநகர் டெல்லியில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 518/5 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது.

அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 175, கேப்டன் சுப்மன் கில் 129*, சாய் சுதர்சன் 87 ரன்கள் எடுத்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ்க்கு அதிகபட்சமாக ஜோமேல் வேரிக்கன் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்ததாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியை நன்றாக பந்து வீசிய இந்தியா 248 ரன்களுக்கு சுருட்டியது. அதிகபட்சமாக அலிக் அதனாஸ் 41 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணிக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3, குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

போராடி வெற்றி:

அடுத்ததாக 270 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா மீண்டும் பேட்டிங் செய்யுமாறு வெஸ்ட் இண்டீஸ்க்கு ஃபாலோ ஆன் கொடுத்தது. அதைத் தொடர்ந்து மீண்டும் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் இத்தொடரில் முதல் முறையாக இந்தியாவை திருப்பி அடித்து 390 ரன்கள் குவித்து அசத்தியது. அந்த அணிக்கு ஜான் கேம்பல் சதத்தை அடித்து 115 ரன்கள் குவித்து அசத்தினார்.

அவருடன் இணைந்து விளையாடிய சாய் ஹோப் சதத்தை அடித்து 103 ரன்கள் குவித்தார். மிடில் ஆடரில் கேப்டன் ரோஸ்டன் செஸ் 40 ரன்கள் எடுத்த நிலையில் ஜஸ்டின் கிரிவ்ஸ் 50* ரன்களை அடித்து இந்தியாவுக்கு சவாலைக் கொடுத்தார். அவருடன் இணைந்து கடைசி விக்கெட்டுக்கு 79 பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை கடுப்பேற்றிய ஜெய்டேன் சீல்ஸ் 32 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

10க்கு 10 உலக சாதனை வெற்றி:

மறுபுறம் 2வது இன்னிங்ஸில் தடுமாற்றமாக பந்து வீசிய இந்தியாவுக்கு அதிகபட்சமாக முகமது சிராஜ் 2, ஜஸ்ப்ரித் பும்ரா 3, குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் எடுத்தார். இறுதியில் 121 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் 8 ரன்னில் அவுட்டானார். 2வது விக்கெட்டுக்கு 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த சுதர்சன் 39 ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்து வந்த கேப்டன் கில் 13 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக விளையாடிய கேஎல் ராகுல் அரை சதத்தை அடித்து 58*, துருவ் ஜுரேல் 6* ரன்கள் எடுத்தனர். அதனால் 124/3 ரன்களை எடுத்த இந்தியா 7 வித்தியாசத்தில் வென்று இத்தொடரின் கோப்பையை 2 – 0 (2) என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்து முத்தமிட்டது. இதையும் சேர்த்து வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக விளையாடிய கடைசி 10 டெஸ்ட் தொடர்களில் இந்தியா 10 வெற்றிகளை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: ரொம்ப சீக்கிரம் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும்.. அவர் அதுக்கு தகுதியானவர் – ஆகாஷ் சோப்ரா கருத்து

2002க்குப்பின் 2025 வரை கடந்த 23 வருடங்களில் வெஸ்ட் இண்டீஸை எதிர்கொண்ட 10 தொடர்களிலும் இந்தியா 10 வெற்றிகளைப் பெற்றுள்ளது. இதன் வாயிலாக “ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக டெஸ்ட் தொடர்களில் வென்ற அணி” என்ற தென்னாபிரிக்காவின் உலக சாதனையை இந்தியா சமன் செய்துள்ளது. இதற்கு முன் தென்னாப்பிரிக்காவும் 1998 – 2024 காலகட்டங்களில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 10 தொடர்ச்சியான தொடர்களில் வென்றுள்ளது.

Advertisement