- Advertisement -
இந்திய கிரிக்கெட்

மகளிர் அண்டர்-19 உ.கோ: 60 ரன்ஸ்.. திரிஷா அசத்தலில் இலங்கையை சாய்த்த இந்தியா.. 3க்கு 3.. சூப்பர் 6க்கு தகுதி

மலேசியாவில் ஐசிசி மகளிர் 2025 அண்டர் 19 டி20 உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது. அந்தத் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய மூன்றாவது போட்டியில் இலங்கையை எதிர்கொண்டது. கோலாலம்பூர் நகரில் ஜனவரி 23ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீராங்கனை கொங்காடி திரிஷா நிதானமாக விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் தமிழக வீராங்கனை கமலினி 5, சணிக்கா 0, கேப்டன் நிக்கி பிரசாத் 11, பவிக்கா 7 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். மறுபுறம் தொடர்ந்து நிதானமாக விளையாடிய திரிஷா ஐந்து பவுண்டரில் ஒரு சிக்சருடன் 49 (44) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இந்தியா அசத்தல்:

இறுதியில் மிதிலா வினோத் 16 (10), ஜோஷிதா 14 (9) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் இந்தியா 118-9 ரன்கள் எடுத்தது. இலங்கை அணிக்கு அதிகபட்சமாக மெதஸ்திரா 2, லிமன்சா 2, தலகுனே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அடுத்ததாக 119 ரன்களை துரத்திய இலங்கை அணி ஆரம்பம் முதலே தடுமாற்றமாக விளையாடியது.

குறிப்பாக இந்திய வீராங்கனைகளின் தரமான பந்து வீச்சில் அதிரடி காட்ட முடியாத அந்த அணியின் 10 வீராங்கனைகள் 10 ரன்களை தாண்டவில்லை. அதிகபட்சமாக ராஷ்மிகா 15 ரன்கள் எடுத்தார். இறுதியில் 20 ஓவரில் 58-9 ரன்கள் மட்டுமே எடுத்த இலங்கை தோல்வியை சந்தித்தது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக ஷகில் 2, ஜோசிதா 2, பருணிக்கா சிசோடியா 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள்.

- Advertisement -

சூப்பர் 6இல் இந்தியா:

அதன் காரணமாக 60 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. மேலும் இந்த தொடரில் லீக் சுற்றில் வெஸ்ட் இண்டீஸ், மலேசியா, இலங்கை ஆகிய 3 அணிகளுக்கு எதிராக இந்தியா 3 அடுத்தடுத்த வெற்றிகளுடன் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது. அதனால் குரூப் ஏ பிரிவில் முதலிடம் பிடித்த இந்தியா சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இதையும் படிங்க: ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியால் நிச்சயம் அதை மீட்டெடுக்க முடியும் – இர்பான் பதான் ஆதரவு

அடுத்ததாக சூப்பர் 6 சுற்றில் வங்கதேசம் மற்றும் ஸ்காட்லாந்து அணிகளை இந்தியா எதிர்கொள்கிறது. அந்த போட்டிகள் வரும் ஜனவரி 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கோலாலம்பூரில் நடைபெற உள்ளது. அந்தப் போட்டிகளில் வெல்லும் பட்சத்தில் இந்தியா செமி ஃபைனலுக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -