- Advertisement -
இந்திய கிரிக்கெட்

11 ரன்ஸ்.. போராடிய தெ.ஆ அணியை.. தடுமாற்றமாக பந்து வீசியும் எக்ஸ்ட்ராஸ் வைத்தே இந்தியா வீழ்த்தியது எப்படி?

தென்னாபிரிக்காவுக்கு எதிராக முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் வென்ற இந்தியா இரண்டாவது போட்டியில் தோல்வியை சந்தித்தது. அந்த நிலையில் மூன்றாவது போட்டி செஞ்சூரியன் நகரில் நவம்பர் 13ஆம் தேதி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை எடுத்து களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 219-6 ரன்கள் குவித்தது.

இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் டக் அவுட்டாகி ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடினார். அவருடன் ஜோடி சேர்ந்த திலக் வர்மா தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அந்த வகையில் இரண்டாவது விக்கெட்டுக்கு 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வலுவான துவக்கத்தை கொடுத்தனர்.

- Advertisement -

இந்தியா போராட்டம்:

அதில் அபிஷேக் ஷர்மா அரை சதமடித்து 50 (25) ரன்கள் விளாசி அவுட்டானார். அடுத்ததாக வந்த சூரியகுமார் 1, ஹர்திக் பாண்டியா 18, ரிங்கு சிங் 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய திலக் வர்மா சதம் அடித்து 8 பவுண்டரி 7 சிக்சருடன் 107* (56) ரன்களும் ரமந்தீப் சிங் 15 (6) ரன்களும் விளாசி ஃபினிஷிங் கொடுத்தார்கள்.

தென்னாபிரிக்காவுக்கு அதிகபட்சமாக கேசவ் மகாராஜ் 2, சிம்லேன் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். பின்னர் 220 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு ரியான் ரிக்கல்டன் 20 ரன்களில் அர்ஷ்தீப் வேகத்தில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அதேபோல மறுபுறம் அதிரடி காட்ட முயற்சித்த ஹென்றிக்ஸை 21 ரன்களில் அவுட்டாக்கிய வருண் சக்கரவர்த்தி கேப்டன் ஐடன் மார்க்ரமை 29 (18) ரன்களில் அவுட்டாக்கி அசத்தினார்.

- Advertisement -

இந்தியா வெற்றி:

மிடில் ஆர்டரில் ஸ்டப்ஸ் 12, டேவிட் மில்லர் 18 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள். ஆனால் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ஹென்றிச் க்ளாஸெனை 41 (22) ரன்களில் அவுட்டாக்கிய அர்ஷ்தீப் சிங் முரட்டுத்தனமாக பேட்டிங் செய்து 17 பந்துகளில் 54 ரன்கள் குவித்த மார்கோ யான்செனையும் அவுட்டாக்கி அசத்தினார். அதனால் 20 ஓவரில் தென்னாபிரிக்காவை 208-7 ரன்களுக்கு இந்தியா கட்டுப்படுத்தியது.

இதையும் படிங்க: 219 ரன்ஸ்.. தெ.ஆ அணியை விளாசிய அபிஷேக்.. சுரேஷ் ரெய்னாவை முந்தி திலக் வர்மா 14 வருட புதிய சாதனை

அதனால் வெறும் 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 2 – 1* (4) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இப்போட்டியில் தென்னாபிரிக்க பவுலர்கள் 19 எக்ஸ்ட்ராஸ் ரன்களை வழங்கினார்கள். இந்திய பவுலர்களும் கொஞ்சம் சுமாராகவே பந்து வீசினார்கள். ஆனால் அவர்கள் வெறும் 6 எக்ஸ்ட்ராஸ் ரன்கள் மட்டுமே வழங்கியது 13 ரன்களை மிச்சப்படுத்தி இந்தியாவுக்கு வெற்றியை கொடுத்தது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி 2, அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

- Advertisement -