- Advertisement -
இந்திய கிரிக்கெட்

300 ரன்ஸ்.. கேப்டனாக உலக சாதனை படைத்த சூர்யவன்சி.. தெ.ஆ அணியை வீழ்த்திய இளம் இந்தியா

ஐசிசி 2026 அண்டர்-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விரைவில் ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் விரைவில் துவங்க உள்ளது. அத்தொடருக்கு தயாராகும் நோக்கத்தில் அருகில் உள்ள தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய அண்டர்-19 அணி அங்கு 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. அந்தத் தொடரில் இந்திய கேப்டன் ஆயுஷ் மாத்ரே காயத்தால் விளையாடவில்லை.

அதனால் சமீப காலங்களாக அசத்தி வரும் 14 வயதாகும் வைபவ் சூரியவண்சி இத்தொடரில் தற்காலிகமாக அண்டர்-19 இந்திய அணியை தலைமைத் தாங்குகிறார். இதன் வாயிலாக அண்டர்-19 ஒருநாள் கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதில் தன்னுடைய அணியை தலைமைத் தாங்கிய கேப்டன் என்ற உலக சாதனையை சூரியவன்சி படைத்துள்ளார். இதற்கு முன் 2004ஆம் ஆண்டு அஹ்மத் சேஷாத் 16 வயதில் பாகிஸ்தானின் அண்டர்-19 கேப்டனாக களமிறங்கியதே முந்தைய சாதனை.

- Advertisement -

இளம் இந்தியா அசத்தல்:

அந்த சூழ்நிலையில் முதல் போட்டி தென்னாப்பிரிக்காவில் உள்ள வில்லோமோர் பார்க் மைதானத்தில் ஜனவரி 3ஆம் தேதி நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்க அண்டர் 19 அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இளம் இந்திய அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 300 ரன்கள் குவித்தது.

இந்திய அணிக்கு ஆரோன் ஜார்ஜ் 5, கேப்டன் சூர்யவன்சி 11, வேதாந்த் திரிவேதி 11, அபிஞான் குண்டு 21 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். அதனால் 67/4 என சரிந்த இந்திய அணிக்கு மிடில் ஆர்டரில் பொறுப்புடன் விளையாடிய ஹர்வன்ஸ் பங்காலியா 93 ரன்கள் குவித்தார். அவருடன் இணைந்து ஆர்எஸ் பங்காலியா 65, கனிஷ்க் சௌஹான் 32, கிளன் பட்டேல் 26 ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

மழையைத் தாண்டி வெற்றி:

தென் ஆப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக ஜேஜே பாசன் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்கா அண்டர்-19 அணிக்கு ஜோரீச் வேன் நிதானமாக விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் அட்னன் லகாடின் 19, கேப்டன் முகமத் புல்புல்லா 16 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். அடுத்து வந்த அர்மன் மனக் 46 ரன்கள் எடுத்த போது ரன் அவுட்டாகி சென்றார்.

இதையும் படிங்க: எவ்வளவு வருத்தப்பட்டாலும் போதாது.. ருதுராஜை இந்திய அணி கழற்றி விட இதான் காரணம்.. அஸ்வின் பதிவு

மறுபுறம் தொடர்ந்து போராடிய ஜோரீச் 60* ரன்கள் எடுத்த போது மழை வந்தது. தொடர்ந்து இடியுடன் கனத்த மழை பெய்ததால் மேற்கொண்டு போட்டி நடத்த முடியாத சூழ்நிலை உருவானது. அதனால் நடுவர்கள் டிஎல்எஸ் விதிமுறையை பின்பற்றினார்கள். அப்போது 148/4 ரன்களை எடுத்திருந்த தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவை விட 25 ரன்கள் குறைவாக எடுத்திருந்தது. அதனால் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட இந்திய அணிக்கு அதிகபட்சமாக தீபக் திவேந்திரன் 2 விக்கெட்டுகளை சாதித்தார்.

- Advertisement -