- Advertisement -

வெறும் 4 ரன்ஸ்.. தெறிக்கவிட்ட தெ.ஆ.. கடைசி பந்தில் இந்தியா திரில்லர் வெற்றி.. ஹர்மன்ப்ரீத் மிரட்டல் சாதனை

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில் 2வது போட்டி ஜூன் 19ஆம் தேதி பெங்களூரு நகரில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு சபாலி வர்மா 20 (38) ரன்னில் அவுட்டானார்.

இருப்பினும் மற்றொரு துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருடன் சேர்ந்து விளையாடிய ஹேமலதா 24 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுபுறம் தொடர்ந்து அசத்திய மந்தனா அரை சதமடித்து இந்தியாவை வலுப்படுத்தினார். அவருடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் அதிரடியாக விளையாடினார்.

- Advertisement -

திரில்லர் வெற்றி:
அந்த வகையில் மிடில் ஓவர்களில் அட்டகாசமாக விளையாடிய இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 171 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்தது. அதில் சதமடித்த மந்தனா 18 பவுண்டரி 2 சிக்சருடன் 136 (120) ரன்கள் விளாசி அவுட்டானார். ஆனால் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் வெளுத்து வாங்கிய ஹர்மன் பிரீத் 9 பவுண்டரி 3 சிக்ஸருடன் சதமடித்து 103* (88) ரன்கள் குவித்தார்.

குறிப்பாக 87 பந்துகளில் 100 ரன்கள் தொட்ட அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமடித்த இந்திய வீராங்கனை என்ற தனது சொந்த சாதனையை உடைத்து புதிய வரலாற்றுச் சாதனை படைத்தார். இதற்கு முன் கடந்த 2017ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹர்மன்பிரித் 90 பந்துகளில் சதமடித்ததே முந்தைய சாதனையாகும். இறுதியில் ரிச்சா கோஸ் 25* (13) ரன்கள் எடுத்ததால் 50 ஓவரில் இந்தியா 325/3 ரன்கள் குவித்தது.

- Advertisement -

தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ம்லாபா 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 326 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு தன்சிம் பிரிட்ஸ் 5, போஸ்க் 18, சுனே லஸ் 12 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 67/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய தென்னாப்பிரிக்காவுக்கு மற்றொரு துவக்க வீராங்கனை லாரா வால்வார்ட் நிதானமாக அதிரடியாகவும் விளையாடினார்.

அவருடன் ஜோடி சேர்ந்த மாரீசன் காப் அதிரடியாக விளையாடினார். அந்த வகையில் மிடில் ஓவர்களில் இந்திய பவுலர்களை அடித்து நொறுக்கிய இந்த ஜோடி நேரம் செல்ல செல்ல அதிரடியை அதிகப்படுத்தி சதமடித்தது. அதே வேகத்தில் இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 184 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்ததால் இந்தியாவின் வெற்றி கை நழுவ ஆரம்பித்தது.

- Advertisement -

ஆனால் அதில் மாரீசன் காப் முக்கிய நேரத்தில் 11 பவுண்டரி 3 சிக்சருடன் 114 (94) ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனாலும் அடுத்து வந்த டீ கிளார்க் அதிரடி காட்டியதால் பூஜா வஸ்திரகார் வீசிய கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்காவுக்கு வெறும் 11 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் அந்த ஓவரில் முதலிரண்டு பந்துகளில் 5 ரன்கள் கொடுத்த பூஜா 3வது பந்தில் டீ கிளார்க்கை அவுட்டாக்கி அடுத்து வந்த சங்கீஷை கோல்டன் டக் அவுட்டாக்கினார்.

இதையும் படிங்க: 3 போட்டியால் மோசமாகல.. முக்கிய நேரத்தில் அதை நெருங்கும் விராட் கோலி கெடுத்துறாதீங்க.. மைக்கேல் கிளார்க்

அதற்கடுத்ததாக வந்த டி ரைடர் 1 ரன் மட்டுமே எடுத்ததால் தென்னாப்பிரிக்காவுக்கு கடைசி பந்தில் 5 ரன் தேவைப்பட்டது. அப்போது 135* (135) ரன்கள் விளாசி நன்கு செட்டிலாகியிருந்த லாராவுக்கு எதிராக டாட் பந்தை வீசிய பூஜா இந்தியாவை வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற வைத்தார். அதனால் 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரை ஆரம்பத்திலேயே கைப்பற்றிய இந்திய அணிக்கு அதிகபட்சமாக தீப்தி சர்மா பூஜா வஸ்திரகர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -