6க்கு 6.. இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய சிங்கப்பெண்கள் அணி.. வரலாற்றை மாற்றி எழுதி சாதனை வெற்றி

- Advertisement -

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் 2 போட்டிகளில் வென்ற இந்தியாவை 3வது போட்டியில் இங்கிலாந்து தோற்கடித்தது. அந்த சூழ்நிலையில் 4வது போட்டி ஜூலை 9ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் இந்திய நேரப்படி இரவு 11.00 மணிக்கு நடைபெற்றது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு டேனியல் வைட் 5 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். மறுபுறம் அதிரடி காட்ட முயற்சித்த சோபியா டுங்லி 22 (19) ரன்னில் அவுட்டானார். அடுத்ததாக வந்த அலிஸ் கேப்சி 18 (21), கேப்டன் டம்மி பியூமோண்ட் 20 (19) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர்.

- Advertisement -

அசத்தல் பவுலிங்:

அதே போல லோயர் ஆர்டரில் எமி ஜோன்ஸ் 9, ஃபைக் 15, சார்லி டீன் 4 ரன்களில் அவுட்டாகி ஃபினிசிங் செய்யத் தவறினார்கள். இறுதியில் சோபி எக்லஸ்டன் 16*, இசி ஓங் 11* ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் இங்கிலாந்தை 126/7 ரன்களுக்கு இந்தியா கட்டுப்படுத்தி அசத்தியது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக ஸ்ரீ சரணி, ராதா யாதவ் தலா 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள்.

அடுத்த விளையாடிய இந்தியாவுக்கு அதிரடியாக பேட்டிங் செய்து 56 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்த ஷபாலி வர்மா 31 (19) ரன்னில் அவுட்டானார். அவருடன் சேர்ந்து மறுபுறம் நிதானமாக விளையாடிய மந்தனா 32 (31) ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த கேப்டன் ஹர்மன்பிரீத் நிதானமாக விளையாடி 26 (25) ரன்னில் அவுட்டானார்.

- Advertisement -

சாதனை வெற்றி:

அதே போல அமன்ஜோத் கௌர் 2 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்த போதிலும் ஜெமிமா நங்கூரமாக விளையாடி 24* (22) ரன்கள் எடுத்தார். இறுதியில் ரிச்சா கோஸ் 7* (4) ரன்கள் எடுத்த உதவியுடன் ஓவரிலேயே 127/4 ரன்களை எடுத்த இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. அதனால் 3 – 1* (5) என்ற கணக்கில் கடைசி போட்டிக்கு முன்பாகவே இத்தொடரை வென்று இந்திய சிங்கப்பெண்கள் அணி அசத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஈகோ கிடையாது.. பிரச்சனையே பஸ்பால் தான்.. இங்கிலாந்தை கெடுத்த மெக்கல்லமின் பிளானை விளக்கிய அஸ்வின்

இதன் வாயிலாக சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் முறையாக ஒரு தொடரை இந்தியா சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய 6 தொடர்களிலும் இந்தியா 6 தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்திருந்தது. அந்த மோசமான வரலாற்றை இம்முறை இங்கிலாந்தை அதனுடைய சொந்த மண்ணில் இன்று மாற்றி எழுதியுள்ள இந்திய மகளிரணி சாதனை வெற்றியைப் பெற்றுள்ளது.

Advertisement