50 ரன்ஸ்.. வங்கதேசத்தை தோற்கடித்த இந்தியா.. 13 சிக்ஸருடன் 17 வருட அசத்தல் சாதனை.. செமி ஃபைனல் உறுதியானதா?

IND vs BAN 3
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய 2வது சூப்பர் 8 போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டது. அப்போட்டி வெஸ்ட் இண்டீஸில் உள்ள ஆன்ட்டிகுவா நகரில் ஜூன் 22ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு 3 பவுண்டரி 1 சிக்ஸரை பறக்க விட்ட கேப்டன் ரோஹித் சர்மா 23 (11) ரன்களில் அவுட்டானார். அடுத்த சில மறுபுறம் நங்கூரமாக விளையாட முயற்சித்த விராட் கோலியும் 37 (28) ரன்களில் அவுட்டாகி சென்றார். அப்போது வந்த சூரியகுமார் யாதவ் 6 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

அசல்ட்டான வெற்றி:
அதற்கடுத்த சில ஓவரில் மறுபுறம் அதிரடி காட்ட முயற்சித்த ரிஷப் பண்ட்டும் 36 (24) ரன்களில் அவுட்டானதால் 108/4 என இந்தியா தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ந்த சிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடி ஐந்தாவது விக்கெட்டுக்கு 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்தனர். அதில் சிவம் துபே 34 (24) ரன்களில் ஆட்டமிழந்தார்.

மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் அசத்திய பாண்டியா 4 பவுண்டரி 3 சிக்சருடன் 50* (27) ரன்கள் விளாசி ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 20 ஓவரில் இந்தியா 196/5 ரன்கள் எடுத்தது. வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக டன்சிம் ஹசன், ரிஷாத் ஹொசைன் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 197 ரன்களை துரத்திய வங்கதேசத்துக்கு லிட்டன் தாஸ் 13 (10) ரன்களில் பாண்டியா வேகத்தில் அவுட்டானார்.

- Advertisement -

அதே போல மறுபுறம் தடுமாறிய தன்சித் ஹசன் 29 (31) ரன்களில் குல்தீப் யாதவ் சுழலில் சிக்கினார். அதோடு நிற்காத அவர் அடுத்ததாக வந்த ஹரிடாய் 4, ஷாகிப் அல் ஹசன் 11 ரன்களில் அவுட்டாக்கி வங்கதேசத்துக்கு அழுத்தத்தை உண்டாக்கினார். அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் மறுபுறம் நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடிய கேப்டன் சாந்தோ 40 (32) ரன்களில் பும்ரா வேகத்தில் அவுட்டானார்.

இறுதியில் முகமதுல்லா 13, ஜாகிர் அலி 1, ரிசாத் ஹுசைன் 24 ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் வங்கதேசம் 146/8 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3, ஜஸ்ப்ரித் பும்ரா 2, அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதனால் 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா சூப்பர் 8 சுற்றில் 2 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: இந்தியா 196 ரன்ஸ்.. வங்கதேசத்தை வெளுத்த பாண்டியா, துபே, பண்ட்.. விராட் கோலி மாபெரும் உலக சாதனை

அதனால் இந்தியா செமி ஃபைனல் செல்வதற்கான வாய்ப்பை 90% உறுதி செய்துள்ளது. குறிப்பாக நாளை ஆப்கானிஸ்தான் அணியை ஆஸ்திரேலியா தோற்கடித்தால் இந்தியா 100% தகுதி பெறும். மேலும் இப்போட்டியில் 13 சிக்ஸர்கள் (ரோஹித் 1, கோலி 3, பண்ட் 2, சூர்யகுமார் 1, துபே 3, பாண்டியா 3) அடித்த இந்தியா ஒரு டி20 உலகக் கோப்பை போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்து சாதனையும் படைத்தது. இதற்கு முன் 2007 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக 11 சிக்ஸர்கள் அடித்ததே இந்தியாவின் முந்தைய சாதனையாகும்.

Advertisement