- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அவதரித்த சேஸ் மாஸ்டர்.. ஆஸியை வீழ்த்தி இந்தியாவை அழைத்துச் சென்ற கிங் கோலி.. டி20 உ.கோ ரீவைண்ட்

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2007 முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 2007இல் கோப்பையை வென்று கடந்த 17 வருடங்களில் சில மகத்தான வெற்றிகளை பதிவு செய்துள்ளது. அந்த வரிசையில் 2016 டி20 உலகக் கோப்பையின் நாக் அவுட் சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்ற விதம் ரசிகர்களால் மறக்க முடியாது.

ஆம் சொந்த மண்ணில் நடைபெற்ற அந்த உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியிலேயே தோற்ற இந்தியா 2வது போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை வீழ்த்தியது. அத்துடன் வங்கதேசத்துக்கு எதிராக வெறும் 1 ரன் வித்தியாசத்தில் இந்தியா மேஜிக் வெற்றி பெற்றது. அதனால் 2016 மார்ச் 27ஆம் தேதி மொஹாலியில் நடைபெற்ற கடைசி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் எப்படியாவது வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்கியது.

- Advertisement -

அவதரித்த சேஸ் மாஸ்டர்:
அப்போட்டியில் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 161 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக ஆரோன் பின்ச் 43, மேக்ஸ்வெல் 31 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து சேசிங் செய்த இந்தியாவுக்கு ரோஹித் சர்மா 12, ஷிகர் தவான் 13 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த போதிலும் 3வது இடத்தில் விராட் கோலி நங்கூரமாக விளையாடினார்.

ஆனால் அடுத்ததாக வந்த சுரேஷ் ரெய்னா 10 ரன்னில் நடையை கட்டினார். அதனால் 49/3 என தடுமாறிய இந்திய அணிக்கு எதிர்ப்புறம் வந்த யுவராஜ் சிங் தடுமாற்றமாக விளையாடி 21 (18) ரன்களில் அவுட்டாகி அழுத்தத்தை உண்டாக்கினார். ஏனெனில் பேட்டிங்க்கு சவாலாக மாறிய மொஹாலி பிட்ச்சில் இந்தியாவின் வெற்றிக்கு கடைசி 6 ஓவரில் 67 ரன்கள் தேவைப்பட்டது.

- Advertisement -

அப்போது வந்த கேப்டன் தோனியுடன் கைகோர்த்த விராட் கோலி முழு மூச்சுடன் வெற்றிக்கு போராடினார். அந்த சமயங்களில் ஆஸ்திரேலியாவும் அற்புதமாக பந்து வீசியதால் விராட் கோலியும் – தோனியும் பவுண்டரி அடிக்கத் தடுமாறினார்கள். ஆனால் அந்த அழுத்தத்தை உடைப்பதற்காக 15, 16, 17வது ஓவர்களில் அந்த இருவருமே சிங்கிள் இல்லாத இடத்தில் வெறித்தனமாக ஓடி 1 ரன்னும் சிங்கிள் மட்டுமே எடுக்க வேண்டிய இடத்தில் டபுள் ரன்னும் எடுத்து ஆஸ்திரேலியர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

அதே வேகத்தில் ஜேம்ஸ் பல்க்னர் வீசிய 18வது ஓவரின் முதல் 2 பந்துகளில் அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்க விட்ட விராட் கோலி 3வது பந்தில் சிக்ஸர் அடித்து ஆஸ்திரேலியாவின் தன்னம்பிக்கையை உடைத்தார். அந்த ஓவரில் 19 ரன்கள் எடுத்த இந்தியாவுக்கு கௌல்டர்-நைல் வீசிய 19து ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது விஸ்வரூபம் எடுத்த விராட் கோலி 1, 5வது பந்துகளை தவிர்த்து எஞ்சிய 4 பந்துகளில் பவுண்டரிகளை அடித்தார்.

- Advertisement -

அப்படியே ஜேம்ஸ் பல்க்னர் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் பவுண்டரியை அடித்த தோனி தம்முடைய ஸ்டைலில் ஃபினிஷிங் செய்தார். அதனால் 19.1 ஓவரில் இலக்கை எட்டிய இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வாழ்வா – சாவா போட்டியில் ஆஸ்திரேலியாவை நாக் அவுட் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்து செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றது. 18* (10) ரன்கள் எடுத்த தோனிக்கு நிகராக வெறித்தனமாக ஓடி சிங்கிள் டபுள்களை எடுத்த விராட் கோலி மைதானத்திலேயே உட்கார்ந்து தலை மீது பேட்டை வைத்து கொண்டாடியதை ரசிகர்களால் மறக்க முடியாது.

இதையும் படிங்க: அவருக்கு இதான் கடைசி உலகக் கோப்பைன்னு யார் சொன்னா? அது வரைக்கும் விளையாடுவாரு.. ஸ்ரீகாந்த்

அத்துடன் அழுத்தமான நேரத்தை சரியாக கணக்கிட்டு சூழ்நிலைக்கு தகுந்தார் போல் செயல்பட்டு 82* (51) ரன்கள் விளாசி இந்தியாவை வெற்றி பெற வைத்த விராட் கோலியை அன்றிலிருந்து தான் அனைவரும் சேஸ் மாஸ்டர் என்றழைக்கத் தொடங்கினர். மேலும் அந்த வெற்றியே தம்முடைய சர்வதேச டி20 கேரியரின் சிறந்த இன்னிங்ஸ் என்று விராட் கோலி இப்போதும் பெருமையுடன் சொல்வார்.

- Advertisement -