சென்னை போட்டியில் நடந்த அரிய நிகழ்வு. சர்வதேச அரங்கில் இது 4 ஆவது முறையாம் – விவரம் இதோ

Wi
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தொடரில் முன்னிலை வகிக்கிறது.

IND

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தீர்மானித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 287 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பண்ட் 76 ரன்களும், அய்யர் 70 ரன்களும் குவித்தனர். அதன் பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 47.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 291 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் ஆட்டம் முழுவதுமே 10 விக்கெட்டுகள் மட்டுமே விழுந்தன. அதில் இந்திய வீரர்கள் 8 பேரில் 7 பேர் வேகப்பந்து வீச்சுக்கு ஆட்டமிழந்தார்கள். ஜடேஜா மட்டும் ரன் அவுட் ஆனார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் விழுந்த 2 விக்கெட்டுகளும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வீழ்ந்தன. ஆகமொத்தம் விழுந்த 10 விக்கெட்டுகளில் 9 விக்கெட்டுகள் வேகப்பந்து வீச்சாளருக்கும், ஒரு விக்கெட் ரன்அவுட்டாகவும் அமைந்தது.

Jadeja 1

இதனால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நேற்றைய போட்டியில் ஒரு விக்கெட் கூட கிடைக்கவில்லை. இந்த போட்டியில் மொத்தம் 198 பந்துகளை சுழற்பந்து வீச்சாளர்கள் வீசியுள்ளனர். அதில் யாராலும் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியவில்லை. இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் 126 பந்துகளையும், வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளர்கள் 72 இரண்டு பந்துகளையும் வீசினார்கள்.

இதுபோன்று அதிக பந்துகளை வீசி சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுக்காதது இது சர்வதேச கிரிக்கெட்டில் நான்காவது முறையாகும். இதற்கு முன்னர் அதிக பந்துகள் வீசிய நிலையில் ஒரு விக்கெட் கிடைக்காத போட்டியாக வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டியில் 2001 ஆம் ஆண்டு 222 பந்துகள் வீசப்பட்ட நிலையில் அதில் ஒரு விக்கெட் கூட கைப்பற்ற முடியாத போட்டியாக முதல் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement