சர்வதேச டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் கடைசி நேரத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் கோப்பையை தக்க வைக்க முடியாமல் வெளியேறியதும் கதை முடிந்ததாக கருதப்பட்ட பாகிஸ்தான் நெதர்லாந்து உதவியுடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றதும் யாருமே எதிர்பாராத ஒன்றாக அமைந்தது. இதையடுத்து துவங்கும் அரையிறுதி சுற்றில் வரும் நவம்பர் 9ஆம் தேதியன்று நியூசிலாந்தை பாகிஸ்தானும் நவம்பர் 10ஆம் தேதியன்று இந்தியாவை இங்கிலாந்தும் எதிர்கொள்கிறது.
அதில் அபாரமாக செயல்பட்டு பைனலுக்கு சென்று கோப்பையை வெல்ல 4 அணிகளும் தயாராகி வருகின்றன. இருப்பினும் கிரிக்கெட்டின் பரம எதிரிகளாக போற்றப்படும் இந்தியாவும் பாகிஸ்தானும் அரையிறுதி சுற்றில் வென்று 2007 போல மீண்டும் இறுதிப்போட்டியில் மோதுமா என்பதே இரு நாட்டைச் சேர்ந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதை விட இறுதியில் 1992 உலகக்கோப்பை போல தங்களது அணி வெல்லும் என்று பாகிஸ்தான் ரசிகர்களும் 2011 போல தங்களது அணி தான் வெல்லும் என்று இந்திய ரசிகர்களும் சமூக வலைதளங்களில் மல்லுக்கட்டி வரும் நிலையில் அதற்கான காரணங்களை பார்ப்போம்.
1992 ரிட்டர்ன்ஸ்:
1. முதலில் 1992இல் இதே ஆஸ்திரேலிய மண்ணில் இம்ரான் கான் தலைமையில் உலகக் கோப்பையை வென்ற பாகிஸ்தான் அதற்கு முந்தைய உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் அரையிறுதியில் தோற்றது. அதே போல் இதற்கு முன் கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் அரை இறுதியில் பாகிஸ்தான் தோற்றது.
2. அத்துடன் 1992 உலக கோப்பையில் தங்களுடைய முதல் போட்டியில் மெல்போர்ண் மைதானத்தில் தோற்ற பாகிஸ்தான் இந்த உலக கோப்பையிலும் அதே மெல்போர்ன் மைதானத்தில் தங்களது முதல் போட்டியில் தோற்றது. அதிலும் குறிப்பாக 1992 உலக கோப்பையில் குரூப் சுற்றில் இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தான் இந்த உலக கோப்பையிலும் குரூப் சுற்றில் இந்தியாவிடம் தோற்றுள்ளது.
3. ஆனால் 1992 உலக கோப்பையில் கடைசி 3 குரூப் போட்டிகளில் வென்ற பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அதே போல இந்த உலக கோப்பையிலும் கடைசி 3 போட்டிகளில் வென்ற பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
4. அதை விட 1992 உலகக் கோப்பையில் கடைசி நாளில் வெறும் ஒரு புள்ளி வித்தியாசத்தில் கடைசி நேரத்தில் நாக் அவுட் சுற்றுக்குள் உள்ளே புகுந்த பாகிஸ்தான் இந்த உலகக் கோப்பையிலும் கடைசி நாளில் கடைசி நேரத்தில் வெறும் ஒரு புள்ளி வித்தியாசத்தில் அரை இறுதிக்குள் வந்துள்ளது (பாகிஸ்தான் 6 புள்ளிகள், தென்ஆப்பிரிக்கா 5 புள்ளிகள்).
5. அத்துடன் 1992 உலகக்கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்தை தோற்கடித்து ஃபைனலில் கோப்பையை வென்றது போல இம்முறையும் அதே நியூசிலாந்தை செமி ஃபைனலில் பாபர் அசாம் தலைமையிலான தோற்கடித்து கோப்பை வெல்லுமென்று பாகிஸ்தான் ரசிகர்கள் கெத்தாக பேசுகின்றனர்.
2011 இஸ் பேக்:
1. ஆனால் 2011இல் 28 வருடங்கள் கழித்து தோனி தலைமையில் நிகழ்த்திய மேஜிக்கை இம்முறை ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா நிகழ்த்தும் என்று இந்திய ரசிகர்களும் வலுவான காரணங்களை அடுக்குகிறார்கள்.
2. முதலில் 2011 உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவிடம் மட்டுமே லீக் சுற்றில் தோல்வியை சந்தித்த இந்தியா இம்முறையும் லீக் சுற்றில் அந்த அணியிடம் மட்டுமே தோற்றது.
3. அதை விட 2011 உலகக் கோப்பையில் வரலாற்றில் முதல் முறையாக கத்துக்குட்டி அயர்லாந்திடம் 50 ஓவர் உலகக் கோப்பையில் தோல்வியை சந்தித்த இங்கிலாந்து இம்முறையும் வரலாற்றில் முதல்மு றையாக 20 ஓவர் உலகக் கோப்பையில் அந்த அணியிடம் தோல்வியை சந்தித்துள்ளது.
4. மேலும் 2011 உலகக் கோப்பை அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறாத ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் இம்முறையும் ஆச்சர்யப்படும் வகையில் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறவில்லை. அத்துடன் 2011 உலகக் கோப்பை அரை இறுதியில் விளையாடிய 4 அணிகளில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய 3 அணிகள் இம்முறையும் விளையாடுகின்றன.
6. மேலும் 2011 உலக கோப்பையில் லீக் சுற்றில் தோனி தடுமாறியது போல இம்முறை கேப்டன் ரோகித் சர்மா தடுமாறி வருகிறார். அது போக விளையாட்டாக தோனி சொன்னாலும் 2011இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஓரியோ பிஸ்கட் மீண்டும் அவரது கையாலே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் இந்தியா கோப்பையை கோப்பையை வெல்வது உறுதியென்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நம்பிக்கையுடன் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கின்றனர்.
7. அதே சமயம் 2019 போல நாங்கள் உள்ளே வரப்போகிறோம் என்று இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ரசிகர்களும் கெட்டு காட்டுகின்றனர்



