- Advertisement -
இந்திய கிரிக்கெட்

117 ரன்ஸ்.. சேசிங்கில் கம்பீருக்கு திறமையை காட்டிய ருதுராஜ்.. அபார சதத்தால் தெ.ஆ’வை சாய்த்த இந்தியா ஏ

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஏ கிரிக்கெட் அணிகள் முதலாவதாக மோதிய டெஸ்ட் தொடர் 1 – 1 (2) என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அடுத்ததாக அவ்விரு அணிகள் மோதும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நவம்பர் 13ஆம் தேதி குஜராத் மாநிலத்திலுள்ள ராஜ்கோட் நகரில் துவங்கியது. அத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா ஏ முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா ஏ அணி 50 ஓவரில் போராடி 285/9 ரன்களை அடித்தது. 1/3 என ஆரம்பத்திலேயே திண்டாடிய அந்த அணிக்கு அதிகபட்சமாக டிலானோ பாட்கிட்டர் 90, டியன் பாரஸ்டர் 77, பிஜோர்ன் பார்ட்சுன் 49 ரன்கள் எடுத்தார்கள். இந்தியா ஏ அணிக்கு அதிகபட்சமாக ஹர்ஷித் ராணா 2 அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

- Advertisement -

ருதுராஜ் அசத்தல்:

அவர்களுடன் பிரசித் கிருஷ்ணா, நிஷாந்த் சிந்து, நித்திஷ் ரெட்டி, அரியான் பராக் ஆகியோரும் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். அடுத்ததாக 286 ரன்களை துரத்திய இந்தியா ஏ அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் நிதானம் கலந்த அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் சேர்ந்து 64 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாட முயற்சித்து 31 (25) ரன்னில் அவுட்டானார்.

அடுத்து வந்த ரியான் பராக் 8 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். 3வது விக்கெட்டுக்கு 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் திலக் வர்மா 38 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். மறுபுறம் தொடர்ந்து அசத்திய ருதுராஜ் அரை சதத்தை அடித்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். எதிர்ப்புறம் வந்த இசான் கிசான் 17 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தார்.

- Advertisement -

இந்தியா வெற்றி:

இந்தப் பக்கம் தொடர்ந்து தென்னாப்பிரிக்க பவுலர்களை அபாரமாக எதிர்கொண்ட ருதுராஜ் கெய்க்வாட் சதத்தை அடித்து 12 பவுண்டரி 117 (129) ரன்கள் குவித்து அவுட்டானார். சீனாவில் நடைபெற்ற 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் கேப்டனாக தங்கப்பதக்கம் வென்ற அவர் கௌகாத்தி டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதத்தை அடித்து அசத்தினார். அதன் பின் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் போது காயத்தை சந்தித்த அவர் மீண்டும் குணமடைந்து நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இதையும் படிங்க: சாதியக் கிண்டலுக்காக வேதனைப்பட்ட எனக்கு.. அவர் இருமடங்கு மரியாதை வழங்கிட்டாரு.. ஜெமிமா பதிலடி

இருப்பினும் தம்மை கண்டுகொள்ளாத தேர்வுக்குழு மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு அவர் இப்போட்டியில் சதத்தை அடித்து மீண்டும் தனது திறமையை நினைவு படுத்தியுள்ளார். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் நித்திஷ் ரெட்டி அதிரடியாக 37 (26) ரன்கள் குவித்தார். இறுதியில் நிசாந்த் சந்து 29* (26), ஹர்ஷித் ராணா 6* (2) ரன்கள் எடுத்ததால் 49.3 ஓவரில் 290/6 ரன்களை குவித்த இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 1 – 0* என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக பார்ட்மேன், டியன் வேன் உரேன், பிஜோர்ன் பார்ட்சுன் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.

- Advertisement -