76 ரன்ஸ்.. எடுபடாத சுப்மன் கில் அணி ஆட்டம்.. முக்கால் நாளில் முடித்த இந்தியா ஏ அணி அபார வெற்றி

IND A vs B
- Advertisement -

துலீப் கோப்பையில் 2024 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் ரவுண்ட் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி துவங்கியது. அதில் பெங்களூரு நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா ஏ மற்றும் பி அணிகள் மோதின. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா பி அணி மிகவும் போராடி 321 ரன்கள் குவித்து அசத்தியது.

ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், சர்பராஸ் கான் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் ஒரு கட்டத்தில் அந்த அணி 94-7 என தடுமாறியது. அப்போது அபாரமாக பேட்டிங் செய்த இளம் வீரர் முசீர் கான் சதமடித்து 181 ரன்களும் நவ்தீப் சைனி 56 ரன்களும் அடித்து காப்பாற்றினர். இந்தியா ஏ அணிக்கு அதிகபட்சமாக ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

சுப்மன் கில் அணி சொதப்பல்:

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா ஏ அணி ஆரம்ப முதலே தடுமாற்றமாக விளையாடி 231 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக மயங் அகர்வால் 36, தானுஷ் கோட்டியான் 32, ரியான் பராக் 30, கேஎல் ராகுல் 37, சுப்மன் கில் 25 ரன்கள் எடுத்தனர். இந்தியா பி சார்பில் அதிகபட்சமாக முகேஷ் குமார், நவ்தீப் ஷைனி தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதன் பின் 90 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்தியா பி அணி அதிரடியாக விளையாடி 184 ரன்கள் எடுத்து அவுட்டானது.

அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 61 (47), சர்பராஸ் கான் 46 (36) ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா ஏ அணிக்கு அதிகபட்சமாக ஆகாஷ் தீப் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இறுதியில் 4வது நாள் உணவு இடைவெளிக்கு முன் 275 ரன்கள் துரத்திய இந்தியா ஏ அணி ஒன்று வெற்றி பெறும் அல்லது போராடி டிரா செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அணி பேட்ஸ்மேன்களின் ஆட்டம் இந்தியா பி பவுலர்களுக்கு எதிராக எடுபடவில்லை என்றே சொல்லலாம்.

- Advertisement -

அதிரடி வெற்றி:

குறிப்பாக மயங் அகர்வால் 3, கேப்டன் சுப்மன் கில் 21, துருவ் ஜுரேல் 0, சிவம் துபே 14 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறினர். அதனால் கேஎல் ராகுல் நங்கூரமாக விளையாடி 57 ரன்களும் ரியான் பராக் 31 ரன்கள் எடுத்துப் போராடியும் இந்தியா ஏ அணியை 198 ரன்களுக்கு சுருட்டிய பி அணி சார்பில் அதிகபட்சமாக யாஷ் தயாள் 3, முகேஷ் குமார் 2, நவ்தீப் சைனி 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

இதையும் படிங்க: என்னோட அந்த பெயர் உலகளவில் பிரபலமாக தோனி தான் காரணம் – சூப்பர் தகவலை சொன்ன விராட் கோலி

அதனால் 76 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி அணி 6 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை பிடித்தது. மறுபுறம் இந்தியாவின் துணை கேப்டனாக சமீபத்தில் நியமிக்கப்பட்ட சுப்மன் கில்

Advertisement