எங்களுக்கு இதெல்லாம் ஒரு கஷ்டமே கிடையாது. நியூசி மீண்டும் நொறுக்கிய இந்திய அணி – மீண்டும் வெற்றி

Pandey-1

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி இன்று ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற்றது.

bumrah 2

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஒவ்ரகள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்களை மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக குப்தில் 33 ரன்களையும், சைபர்ட் 33 ரன்களையும் குவித்தனர்.

133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ரோகித் சர்மாவின் விக்கெட்டை இந்த ஆட்டத்திலும் முதலிலேயே இழந்தது. 8 ரன்களில் ரோஹித் சர்மா ஆட்டமிழக்க அதனை தொடர்ந்து கோலியும் 11 ரன்ளுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின்னர் ராகுல் மற்றும் ஐயர் ஜோடி இணைந்து சிறப்பாக விளையாடியது. இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 86 ரன்கள் பாட்னர்ஷிப்பாக குவித்தது குறிப்பிடத்தக்கது.

rahul 3

ஐயர் 44 ரன்களுக்கு ஆட்டம் இழந்து வெளியேற ராகுல் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 50 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். இறுதியில் ஷிவம் துபே சிக்ஸ் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது குறிப்பிடத்தக்கது. இறுதியில் இந்திய அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

- Advertisement -