இந்திய பெண்கள் அணிக்கு வழங்கப்படும் ஒரு ஆண்டு சம்பளம் எவ்வளவு தெரியுமா ? – அநியாயம் செய்யும் பி.சி.சி.ஐ

crickwomens
- Advertisement -

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியை மட்டுமே அதிகளவு நேசித்து வந்த இந்திய கிரக்கெட் ரசிகர்களின் பார்வை, கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிருக்கான ஒரு நாள் உலக கோப்பை தொடருக்குப் பின் இந்திய மகளிர் கிரக்கெட் அணியின் மீதும் சென்றது. அந்த தொடரில் மிக அற்புதமாக விளையாடிய இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டி வரை சென்று நூலிழையில் உலக கோப்பையை கைவிட்டது. உலக கோப்பையை தவறவிட்டிருந்தாலும் இந்திய மகளிர் அணியின் திறமையைக்கண்டு மெய் சிலிர்த்துப் போனார்கள் இந்திய கிரக்கெட் ரசிகர்கள். அதற்கடுத்து கடந்த வருடம் நடைபெற்ற மகளிருக்கான டி20 உலக கோப்பை தொடரிலும் இறுதி ஆட்டம் வரை சென்று, ஆண்களுக்கான இந்திய கிரிக்கெட் அணிக்கு நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்திக் காட்டினர் இந்திய மகளிர் கிரக்கெட் அணியில் இருந்த வீராங்கனைகள்.

womens

- Advertisement -

என்னதான் ஆண்கள் கிரிக்கெட்டிற்கு இணையாக மகளிர் கிரிக்கெட் அணியும் மிகச் சிறப்பாக செயல்பட்டாலும், ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு வழங்கப்படும் சலுகைகளையும், வரவேற்புகளையும் போன்றே மகளிர் கிரிக்கெட் அணிக்கு பிசிசிஐ வழங்குவதில்லை என்ற குரல் எப்போதுமே ஒலித்துக் கொண்டே இருக்கிறது. பிசிசிஐயின் இந்த செயல்பாடுகளை, இந்திய மகளிர் அணியின் சச்சின் டெண்டுல்கர் என வர்ணிக்கப்படும் மிதாலி ராஜும் பலமுறை விமர்ச்சித்து வந்திருக்கிறார். ஏற்கனவே இந்திய மகளிர் அணிக்கு, கொரனா சமயத்தில் ஆடவர் அணிக்கு ஏற்படுத்தி கொடுத்ததைப் போல தொடர்ச்சியான போட்டிகளை பிசிசிஐ அமைத்து தரவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இங்கிலாந்து எதிராக மகளிர் கிரிக்கெட்டுக்கான ஒரு தொடரை ஏற்பாடு செய்து அந்த குற்றச்சாட்டைப் போக்கிக் கொண்ட பிசிசிஐ, அடுத்து ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக பிங்க் பால் டெஸ்ட் போட்டி ஒன்றையும் நடத்த ஏற்பாடு செய்திருக்கிறது.

இதற்கிடையில் பிசிசிஐயின் மற்றொரு முடிவால், மீண்டும் ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. இந்திய கிரக்கெட் வீராங்கனைகளுக்கான ஊதிய ஒப்பந்தத்தை வெளியிட்டுள்ள பிசிசிஐ, அதில் எப்போதும் போலவே மூன்று விதமான தரங்களில் வீராங்கனைகளை பிரித்துள்ளது. A பிரிவில் இடம்பெற்ற வீராங்கனைகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 50 லட்சமும், B பிரிவில் இருக்கும் வீராங்கனைகளுக்கு ரூபாய் 30 லட்சமும், C பிரிவு வீராங்களைகளுக்கு ரூபாய் பத்து லட்சமும் ஊதியமாக வழங்கப்படுவதாக இருக்கிறது. ஆனால் ஆடவருக்கான ஊதியப் பட்டியல் A+ல் ஆரம்பித்து C வரை என நான்கு தரத்தில் இருக்கிறது. அதில் A+ வீரர்களுக்கு 7 கோடி ரூபாயும், A பிரிவு வீரர்களுக்கு 5 கோடி ரூபாயும், B பிரிவு வீரர்களுக்கு 3 கோடி ரூபாயும், C பிரிவு வீரர்களுக்கு 1 கோடி ரூபாயும் ஊதியமாக வழங்குகிறது பிசிசிஐ. இந்த இரண்டு ஊதியப் பட்டியலை ஒப்பிட்டு பார்த்தால், மகளிருக்கான ஊதியப் பட்டியலில் முதல் பிரிவில் இருக்கும் வீராங்கனைகளை விட, ஆடவருக்கான ஊதியப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் வீரர்கள் வாங்கும் ஊதியம் மிகவும் அதிகம்.

womens ind

மேலும் இந்திய வீராங்கனைகளுக்கு, ஒரு ஆண்டுக்கு வழங்கப்படும் ஊதியத்தின் அளவானது விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற முன்னனி வீரர்கள் ஐபிஎல் தொடரில் ஒரு போட்டிக்கு வாங்கும் சம்பளத்தை விடவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கான ஊதியப் பட்டியலைப் பார்த்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக பாரபட்சம் காட்டும் இந்திய கிரக்கெட் நிர்வாகத்தை, சமூக வலைத்தளங்களில் தங்களுடைய கருத்துகளால் சரமாரியாக தாக்கி வருகின்றனர்.

மேலும் மகளிர் கிரிக்கெட் அணிக்கு குறைவான போட்டிகள் அமைத்து தருவதாக குற்றச்சாட்டு எழுந்தபோது, அதற்கு உடனடியாக தீர்வு கண்ட பிசிசிஐயின் தலைவர் சவுரவ் கங்குலி, தற்போது இந்த ஊதியப் பட்டியலுக்கும் உரிய தீர்வை அளிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் காட்டமான அறிவுரையை வழங்கி வருகின்றனர்.

Advertisement