இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி ஜெயிச்ச மிகப்பெரிய ரெக்கார்டு காத்திருக்கு – இலங்கை ரொம்ப பாவம்பா

IND
- Advertisement -

ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோத இலங்கை பயணித்துள்ளது. இந்த புதிய இந்திய அணியில் இளம் வீரர்கள் அதிகளவு உள்ளதால் இந்த தொடரில் இந்திய அணியின் ஆட்டம் எவ்வாறு இருக்கப் போகிறது என்பது அனைவரும் அனைவரது எதிர்பார்ப்பாக இருந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 262 ரன்கள் குவித்தது.

Ishan-6

- Advertisement -

இந்த டீசண்டான இலக்கினை 36.4 ஓவர்களில் அனாவசியமாக விளாசி 263 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. அதோடு இந்த தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் நாளை நடைபெறவிருக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் இலங்கை அணிக்கு எதிராக ஒரு மிகப்பெரிய சாதனையை படைக்க காத்திருக்கிறது.

அந்த சாதனை யாதெனில் 2007ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற 8 ஒருநாள் தொடர்களில் இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. நாளைய போட்டியில் மீண்டும் வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை இரண்டு வெற்றியுடன் இந்திய அணி கைப்பற்றும்.

அப்படி கைப்பற்றும் பட்சத்தில் இலங்கை அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 9 தொடர்களை கைப்பற்றி சாதனை படைக்கும். இதனால் நாளைய போட்டியில் மீதான எதிர்பார்ப்பு இரு மடங்காகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement