இந்தியா ஜிம்பாப்வே டி20 தொடரை எந்த சேனலில் பார்க்கலாம்.. போட்டி இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு நடைபெறும்?

IND-vs-ZIM
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் நடைபெற்ற முடிந்த 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றதை அடுத்து நாடு திரும்பி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய அணி தங்களது அடுத்த தொடருக்காக தற்போது ஜிம்பாப்வே நாட்டிற்கு சுப்மன் கில் தலைமையில் சென்றுள்ளது.

சீனியர் வீரர்கள் அனைவருக்கும் ஓய்வு வழங்கப்பட்டு ஐபிஎல் தொடரில் அசத்திய இளம் வீரர்களைக் கொண்டு இந்த 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டு ஏற்கனவே அந்த அணி ஜிம்பாவே சென்றடைந்துவிட்டது. மொத்தம் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடருக்கான பயிற்சியாளராக லட்சுமணன் இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் இந்த இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடரை எந்த சேனலில் பார்க்கலாம்? போட்டிகள் இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு துவங்கும்? என்பது குறித்த தெளிவான தகவல்களை இங்கே நாங்கள் உங்களுக்காக தொகுத்து வழங்கி உள்ளோம்.

அதன்படி இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியானது ஜூலை 6-ஆம் தேதி இன்று மாலை 4:30 மணிக்கு நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்த இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் ஒளிபரப்பு உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளதால் போட்டிகளை சோனி குழும் சேனல்களில் கண்டு களிக்கலாம். அதோடு ஆன்லைன் வாயிலாக போட்டியை காண விரும்புவோர் சோனி லைவ் ஆப் மூலம் இந்த தொடரை பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இந்திய அணியில் இருந்து முற்றிலுமாக நீக்கப்பட இருக்கும் வீரர்.. அவ்ளோதான் அவரது கரியர் ஓவர் – விவரம் இதோ

விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜடேஜா போன்ற சீனியர் வீரர்கள் ஓய்வு பெற்றுள்ளதால் அடுத்த தலைமுறை இந்திய அணி எவ்வாறு விளையாடப்போகிறது என்கிற எதிர்பார்ப்பும் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement