IND vs ZIM : டாஸ் வென்ற இந்திய அணியில் 4 ஓப்பனர்களுக்கு இடம். என்ன டீம் செலக்சன் இது – பிளேயிங் லெவன் இதோ

KL-Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியானது இன்று ஆகஸ்ட் 18-ஆம் தேதி ஜிம்பாப்வேவின் தலைநகரான ஹராரேவில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் சற்று முன்னர் துவங்கியது. இந்த போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான இந்திய அணியும், சக்பவா தலைமையிலான ஜிம்பாப்வே அணியும் மோதி வருகின்றன. இளம் வீரரான கே.எல் ராகுலின் தலைமையில் இந்திய அணி இந்த தொடரில் பங்கேற்று உள்ளதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

INDvsZIM

- Advertisement -

அதோடு இந்த முதலாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்களுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என்பதும் அனைவரது மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அதன்படி சற்றுமுன் துவங்கிய இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ராகுல் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார்.

அதன் பிறகு இந்த போட்டி குறித்து பேசிய அவர் : நாங்கள் முதலில் பந்து வீச விரும்புகிறோம். இந்த மைதானம் ஆரம்பத்தில் நிச்சயம் பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என்று நினைக்கிறேன். அதன் காரணமாகவே முதலில் பந்து வீசுகிறோம் என்று அறிவித்தார். அதன் பின்னர் இந்திய அணியின் பிளேயிங் லெவன் பட்டியல் வெளியானது.

Shubman Gill

அதில் நான்கு துவக்க வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது சற்று வித்தியாசமான முடிவாக தெரிகிறது. அதன்படி துவக்க வீரர்களான ஷிகார் தவான், சுப்மன் கில், இஷான் கிஷன், கே.எல் ராகுல் ஆகிய நால்வருமே துவக்க வீரராக விளையாடி வருபவர்கள். இப்படி முதல் நான்கு பேருமே ஓப்பனர்களாக இருப்பது ரசிகர்களின் மத்தியிலும் பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

அதோடு 5 மற்றும் 6-வது இடத்தில் இருக்கும் தீபக் ஹூடா மற்றும் சஞ்சு சாம்சன் கூட இந்திய அணியில் ஓபனிங் விளையாடியுள்ளனர். எனவே பேட்டிங் ஆர்டர் முழுவதுமே ஓப்பனர்களால் நிரம்பி உள்ளது. ஆல்ரவுண்டாக அக்சர் பட்டேலும், வேகப்பந்து வீச்சாளர்களாக சிராஜ், பிரசித் கிருஷ்ணா மற்றும் தீபக் சாகர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த அயர்லாந்து அணியின் நட்சத்திர வீரர் – ரசிகர்கள் வாழ்த்து

1) ஷிகார் தவான், 2) சுப்மன் கில், 3) இஷான் கிஷன், 4) கே.எல் ராகுல், 5) தீபக் ஹூடா, 6) சஞ்சு சாம்சன், 7) அக்சர் படேல், 8) தீபக் சாகர், 9) குல்தீப் யாதவ், 10) பிரசித் கிருஷ்ணா, 11) முகமது சிராஜ்.

Advertisement