வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி. வேறு இடத்துக்கு மாற்றம் – காரணம் இதுதான்

Ganguly-2
- Advertisement -

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்ததும் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

ind 1

- Advertisement -

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி டிசம்பர் 6ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டிசம்பர் ஆறாம் தேதி இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய அம்பேத்கரின் நினைவு தினம் அனுசரிப்பு படுவதால் அன்று மும்பை வாங்கடே மைதானத்தில் போதுமான போலீஸ் பாதுகாப்பு தரமுடியாது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் பாதுகாப்பு காரணங்கள் கருதி வேறு போட்டி எங்காவது மாற்றப்படும் என்று தெரிகிறது. ஏனெனில் அன்றைய தினத்தில் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்த மக்கள் அதிகளவில் திரளுவார்கள் என்று கூறப்படுவதால் போலீஸ் பாதுகாப்பு அவர்களுக்கு வழங்கப்படும். அதனால் குறிப்பிட்ட அளவு போலீஸ் பாதுகாப்பு மைதானத்தில் அளிக்க முடியாது என்ற காரணத்தை ஏற்கனவே போலீசார் மும்பை கிரிக்கெட் நிர்வாகத்துக்கு தெரிவித்துள்ளனர்.

இதனால் மும்பை கிரிக்கெட் போர்டும் பிசிசியிடம் ஆலோசனை நடத்தி முதல் போட்டியை மாற்ற முடியுமா ? என்று கேட்க உள்ளது இல்லை எனில் அதே போட்டியை வேறு தினத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்படுமா ? என்பது போல பல கேள்விகளை எழுப்ப உள்ளது. மும்பை கிரிக்கெட் நிர்வாகம் போட்டியை நடத்த மறுத்தாலும் போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற அதிக வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

Advertisement