இந்தியா வெஸ்ட் இண்டீஸ் சென்னையில் ஒரு நாள் போட்டி ரசிகர்கள் ஆரவாரம் – டிக்கெட் விலை இதோ

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 3 டி20 போட்டி கொண்ட தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த டி20 தொடர் முடிந்ததும் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த ஒருநாள் தொடர் டிசம்பர் 15ஆம் தேதி துவங்கவுள்ளது. டிசம்பர் 15ஆம் தேதி நடைபெற இருக்கும் அந்த முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலேயே கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு பார்க்கப்படுவதால் சென்னையில் ரசிகர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை 8 ஆம் தேதி இன்று காலை பத்து முப்பது மணிக்கு துவங்குகிறது என்றும் அதிலிருந்து சில மணிநேரங்களிலேயே டிக்கெட் அனைத்தும் விற்றுத் தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

fans

இந்த போட்டிக்கான டிக்கெட் கட்டணமாக குறைந்தபட்சம் 1200 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 6500 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இணையத்தின் வழியாகவும் டிக்கெட் விற்பனை நடைபெற உள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய சங்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -