5 வருடங்கள் கழித்து அமெரிக்காவில் களமிறங்கும் இந்தியா, வெளியான அதிகராபூர்வ அட்டவணை இதோ

INDvsWI
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் 10 அணிகள் பங்கேற்றதால் 74 போட்டிகளுடன் நடைபெற்ற கோப்பையை வெல்வதற்கு கடும் போட்டி காணப்பட்ட நிலையில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் அசத்திய ராஜஸ்தானை இறுதிப்போட்டியில் தோற்கடித்த ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள அந்த தொடரில் கேஎல் ராகுல் தலைமையில் தினேஷ் கார்த்திக், உம்ரான் மாலிக், அர்ஷிதீப் சிங் என இந்த ஐபிஎல் தொடரில் கலக்கிய மூத்த மற்றும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.

INDvsRSA

- Advertisement -

வரும் ஜூன் 9, 12, 14, 17, 19 ஆகிய தேதிகளில் டெல்லி, கட்டாக், விசாகப்பட்டினம், ராஜ்கோட், பெங்களூரு ஆகிய நகரங்களில் நடைபெறும் இந்த தொடரில் பங்கேற்பதற்காக வரும் ஜூன் 5-ஆம் தேதி டெல்லியில் ஒன்று சேரும் இந்திய வீரர்கள் அதற்கான தீவிர பயிற்சியில் ஈடுபட உள்ளனர். வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் விளையாடும் தகுதியான வீரர்களை கண்டறியும் ஒரு வாய்ப்பாக இந்த தொடர் பார்க்கப்படுகிறது.

வெஸ்ட்இண்டீஸ் தொடர்:
இந்த தொடருக்குப் பின் அயர்லாந்துக்கு எதிராக ஜூன் 26, 28 ஆகிய தேதிகளில் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கும் இந்தியா அதன்பின் பக்கத்தில் இருக்கும் இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் கடந்த வருடம் கிடப்பில் போட்டு வந்த 1 டெஸ்ட் போட்டியுடன் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்கிறது. அந்த 2 தொடர்களையும் முடித்துவிட்டு அப்படியே அருகில் இருக்கும் வெஸ்ட் இண்டீசுக்கு செல்லும் இந்தியா அங்கு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின.

INDvsWI

அதை தற்போது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தொடரில் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள நிக்கோலஸ் பூரன் தலைமையில் வலுவான இந்திய அணியை தனது சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் எதிர்கொள்கிறது. இதில் முதலாவதாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் முழுவதும் போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் நடைபெற உள்ளது.

- Advertisement -

அமெரிக்காவில் இந்தியா:
அதை தொடர்ந்து இவ்விரு அணிகளும் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தொடருக்கு தயாராகும் வகையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. அதில் முதல் 3 போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற உள்ள நிலையில் கடைசி 2 போட்டிகள் அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் நடைபெறவுள்ளது. வரும் 2024-ஆம் நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய 2 கிரிக்கெட் வாரியங்களும் சேர்ந்து நடத்த உள்ளன. அதிலும் அமெரிக்கா இதுபோன்ற ஒரு ஐசிசி தொடரை முதல் முறையாக 2024இல் நடத்த உள்ளது.

INDvsWI

எனவே அதற்கான முன்னோட்டத்தை பார்க்கும் வகையில் தான் இந்தியா போன்ற நம்பர் ஒன் அணியை அமெரிக்காவில் விளையாட வைத்து சோதித்துப் பார்க்கும் முயற்சியில் அந்த இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் சேர்ந்தாற்போல் ஈடுபட்டுள்ளன. சொல்லப்போனால் ஏற்கனவே கடந்த 2016ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதின. அதில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 2-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெறும் 1 ரன் வித்தியாசத்தில் வென்று 1 – 0 என்ற கணக்கில் கோப்பையை வென்றது. அதற்குப் பின் மீண்டும் 5 வருடங்கள் கழித்து இந்தியா அமெரிக்காவில் களமிறங்க உள்ளது.

- Advertisement -

இது மட்டுமல்லாமல் தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகளுக்கு எதிராகவும் சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் விளையாடும் கிரிக்கெட் தொடர்களுக்கான அட்டவணையையும் அந்நாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அதில் இந்திய நேரப்படி அறிவிக்கப்பட்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா மோதும் அட்டவணை இதோ:

Ind-vs-Wi

முதல் ஒருநாள் போட்டி : ஜூலை 22, இரவு 7.00 மணி, போர்ட் ஆஃப் ஸ்பெயின்
2-வது ஒருநாள் போட்டி : ஜூலை 24, இரவு 7.00 மணி, போர்ட் ஆஃப் ஸ்பெயின்
3-வது ஒருநாள் போட்டி : ஜூலை 27, இரவு 7.00 மணி, போர்ட் ஆஃப் ஸ்பெயின்

முதல் டி20 : ஜூலை 29, இரவு 8.00 மணி, ட்ரினிடாட்
2-வது டி20 : ஆகஸ்ட் 1, இரவு 8.00 மணி, செயின்ட் கிட்ஸ்
3-வது டி20 : ஆகஸ்ட் 2, இரவு 8.00 மணி, செயின்ட் கிட்ஸ்
4-வது டி20 : ஆகஸ்ட் 6, இரவு 8.00 மணி, ப்ளோரிடா.
5-வது டி20 : ஆகஸ்ட் 7, இரவு 8.00 மணி, ப்ளோரிடா.

Advertisement