சூடுபிடிக்க உள்ள இந்தியா இலங்கை டி20 டிக்கெட் விற்பனை. இவ்வளவு கம்மியான ரூபாய்க்கு டிக்கெட்டா – விவரம் இதோ

Ind
- Advertisement -

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று 2 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. அடுத்ததாக இலங்கை அணிக்கு எதிராக டி20 போட்டியில் இந்திய அணி பங்கேற்க உள்ளது.

Ind

- Advertisement -

ஜனவரி 5 ஆம் தேதி துவங்கும் இந்த தொடரின் முதல் போட்டி கௌஹாத்தி மைதானத்திலும், இரண்டாம் டி20 போட்டி 7 ஆம் தேதி இந்தூர் மைதானத்திலும், மூன்றாவது டி20 போட்டி 10 ஆம் தேதி புனே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி இந்தூர் மைதானத்தில் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி 27 ஆயிரம் பேர் அமரக் கூடிய வசதி கொண்ட இந்தூர் ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்டிக்கான டிக்கெட் விலையை மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கம் நேற்று அறிவித்தது.

அதன்படி இந்த போட்டிக்கான குறைந்தபட்சம் ரூபாய் 500 க்கும், அதிகபட்ச டிக்கெட் விலை ரூபாய் 4920 கும் வழங்கப்பட உள்ளது. ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை 6ஆம் தேதி துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் 500 ரூபாய்க்கு கிடைப்பதால் ரசிகர்கள் ஆரவாரத்துடன் உள்ளனர். மேலும் புத்தாண்டு தொடங்கி இந்திய அணிக்கு இரண்டாவது போட்டி என்பதால் ரசிகர்களின் வருகை மைதானத்தில் அதிகம் காணப்படும் என்று நம்பப்படுகிறது.

Advertisement