
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ள வேளையில் இந்திய அணி 2 போட்டிகளிலுமே அபாரமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வெற்றி பெற்று இந்த தொடரை ஏற்கனவே இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றிவிட்டது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது ஜூலை 30-ஆம் தேதி இன்று பல்லக்கல்லே நகரில் நடைபெற இருக்கிறது. இந்த மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று வாஷ் அவுட் செய்யும் முனைப்புடன் இந்திய அணியும், அதேவேளையில் இந்த போட்டியில் ஆறுதல் வெற்றி பெறும் முனைப்புடன் இலங்கை அணியும் தயாராகி வருகின்றன.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த மூன்றாவது போட்டி முழுவதுமாக நடைபெறுவதில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் ஏற்கனவே இந்த தொடரின் இரண்டாவது போட்டியின் போது அந்த மைதானத்தில் மழை பெய்து இந்திய அணி விளையாடும்போது ஓவர்கள் குறைக்கப்பட்டது. அது மட்டும் இன்றி நேற்றும் அங்கு பலத்த மழை பெய்துள்ளது. இதன் காரணமாக மைதானம் முழுவதுமாக மூடப்பட்டிருந்தது.
இவ்வேளையில் போட்டியினாலான இன்று 10 சதவீத மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கை வெளியாகி உள்ளது. இதன் காரணமாக இந்த போட்டி முழுவதுமாக நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் போட்டி நடப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மைதான நிர்வாகம் மும்முரப்படுத்தியுள்ளது. ஒருவேளை போட்டியின் இடையே மழை பெய்தாலும் ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை இன்று முழுவதும் மழை பெய்து போட்டி ரத்தானால் என்ன நடக்கும்? என்பது குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இன்றைய போட்டி முழுவதுமாக மழை பெய்து ரத்தனால் கூட ஏற்கனவே இரண்டு போட்டியில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணியானது இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியதாக அறிவிக்கப்பட்டு கோப்பை வழங்கப்படும்.
இதையும் படிங்க : வாயை மூடிக்கிட்டு இருந்தாகனும்.. ஆனா கம்பீர் – கோலி இதை செய்றாங்களான்னு பாப்போம்.. ஸ்காட் ஸ்டைரிஸ் பேட்டி
எனவே மழையால் போட்டி ரத்தானாலும் இந்திய அணிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டி20 தொடர் முடிந்த கையோடு ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.