இந்தியா – இலங்கை தொடர் ஒத்திவைப்பு : ஜூலை 13 ஆம் தேதி துவங்காது – காரணம் இதுதான்

Sl
Advertisement

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரானது ஜூலை 13ஆம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இந்த தொடர் துவங்குவதில் நான்கு நாட்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நான்கு நாட்கள் ஏன் தாமதமாக துவங்கப்படுகிறது என்று என்பதற்கான காரணத்தையும் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Dravid

அதன்படி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர் மற்றும் அணியின் ஊழியர் நிரோஷன் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த தொடரில் தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. கொழும்பு மைதானத்தில் 13ஆம் தேதி துவங்கி 25ம் தேதி வரை இந்த தொடரானது நடைபெற இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது நான்கு நாட்கள் தாமதப்படுத்தப்பட்டு 17ஆம் தேதி துவங்கி 27ம் தேதி முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் ஒருநாள் போட்டி 17ஆம் தேதியும், இரண்டாம் ஒருநாள் போட்டி 19ம் தேதியும், மூன்றாவது ஒருநாள் போட்டி 21ம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

sl

டி20 ஆட்டங்கள் 24, 25, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இலங்கை அணியில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் காரணமாகவே இந்த அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement