டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு. இதனால் தான் பந்துவீச்சை தேர்வு செய்தேன் கோலி அதிரடி – விவரம் இதோ

Kohli-2

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட 3 டி20 தொடரின் முதல் போட்டி இன்று இன்னும் சிறிது நேரத்தில் கௌஹாத்தி மைதானத்தில் நடைபெற உள்ளது/ இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் லசித் மலிங்கா தலைமையிலான இலங்கை அணியும் மோதுகின்றன.

தற்போது டாஸ் போடப்பட்டு இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. டாசுக்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி கூறியதாவது : நாங்கள் முதலில் பந்து வீச விரும்புகிறோம். இந்த மைதானத்தில் அதிகம் விளையாடியது இல்லை என்றாலும் கடந்த முறை விளையாடியபோது சேசிங் செய்வது சிறப்பாக இருந்தது.

நாங்கள் அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக சேசிங் செய்தோம் எனவே இந்த போட்டியில் நாங்கள் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து செட் செய்ய முடிவு செய்திருக்கிறோம். மைதானத்தின் சூழ்நிலையும் எவ்வாறு அமையும் என்பது போட்டியின் போது தான் தெரியும்.

Kohli-1

உலக கோப்பை வருவதால் நாங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளையும் ஜாக்கிரதையாக எடுத்து வருகிறோம். இன்றைய போட்டியில் பாண்டே, சாம்சன், ஜடேஜா மற்றும் சாஹல் ஆகியோர் விளையாடவில்லை. குல்தீப் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் விளையாடுகின்றனர் என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -