இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி “டை” ஆன பின்னரும் சூப்பர் ஓவர் வீசப்படாதது ஏன்? – விவரம் இதோ

IND-vs-SL
- Advertisement -

கொழும்பு நகரில் நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியானது இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் “டை”-யில் முடிவடைந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் குவித்தது. பின்னர் 231 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய இந்திய அணியும் 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்கள் மட்டுமே குவித்தது.

இதன் காரணமாக போட்டி டை-யில் முடிவடைந்தது. அதன் காரணமாக சூப்பர் ஓவர் நடத்தப்படும் என்றும் அதன் பின்னர் முடிவு அறிவிக்கப்படும் என்று நேரலையில் ரசிகர்கள் சூப்பர் ஓவருக்காக ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் போட்டி முடிவடைந்த பின்னர் சூப்பர் ஓவர் வீசப்படாமல் இரு அணி வீரர்களும் கைகுலுக்கி விட்டு மைதானத்தை விட்டு வெளியேறிவிட்டனர்.

- Advertisement -

இப்படி இரு அணி வீரர்களும் மைதானத்தில் இருந்து வெளியேறிய பின்னர் ஏன் இந்த போட்டியில் சூப்பர் ஓவர் வீசப்படவில்லை? என்ற கேள்வி பலரது மத்தியிலும் இருந்திருக்கலாம். அதற்கான காரணத்தை இங்கு காணலாம். அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி ஒருநாள் போட்டிகளுக்கென சில விதிமுறைகளை வைத்துள்ளது. அந்த வகையில் ஒருநாள் போட்டிகள் டை-யில் முடிவடையும்போது சூப்பர் ஓவர் நடத்தப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்த போட்டியில் மட்டும் ஏன் சூப்பர் ஓவர் வீசப்படவில்லை என்றால் ஐசிசி விதிமுறைப்படி டி20 போட்டிகள் டை-யில் முடிந்தால் நிச்சயம் சூப்பர் ஓவர் நடத்தப்பட வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் 50 ஓவர் போட்டிகளுக்கு அப்படி ஒரு விதிமுறை கட்டாயம் கிடையாது. அதேபோன்று ஒவ்வொரு தொடரை நடத்தும் இரு அணிகளை சேர்ந்த நிர்வாகங்களும் 50 போட்டிகளின் போது சூப்பர் ஓவரை வைக்கலாமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -

அந்த வகையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த ஒருநாள் தொடர் அறிவிக்கப்படும்போது அந்த விதிமுறைகளில் போட்டி சமநிலையில் முடிந்தால் டை என்றே அறிவிக்கப்படும் என்றும் சூப்பர் ஓவர் நடத்தப்படாது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதன் காரணமாகவே இந்த போட்டியில் சூப்பர் ஓவர் வீசப்படவில்லை. ஆனால் மற்றபடி ஐசிசி நடத்தும் 50 உலக கோப்பை தொடர், சாம்பியன்ஸ் டிராபி தொடர் போன்ற போட்டிகள் டை-யில் முடிவடையும் வேளையில் சூப்பர் ஓவர் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கம்பீர் வந்ததும் பிரச்சனையை தீத்துட்டோம்.. இந்திய அணியில் இனிமேல் இதை அதிகமா பார்ப்பீங்க.. பஹதுலே

இதற்கு உதாரணமாக 2019-ஆம் ஆண்டு 50 ஓவர் உலககோப்பை தொடரானது இங்கிலாந்தில் நடைபெற்ற போது இறுதிப்போட்டியில் இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி டை ஆனது. அப்போது இரண்டு முறை சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது உங்கள் அனைவருக்கும் நினைவில் இருக்க வாய்ப்புள்ளது.

Advertisement