போட்டி கரெக்ட்டா நடக்கனும். வம்பு எதும் பண்ணாதீங்க. ரசிகர்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் – விவரம் இதுதான்

Ground

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று ஜனவரி 5 ஆம் தேதி இரவு 7 மணிக்கு அசாம் மாநிலம் கவுகாத்தியில் தொடங்குகிறது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், லசித் மலிங்கா தலைமையிலான இலங்கை அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

ind

இந்த போட்டிக்கான ரசிகர்களின் கட்டுப்பாடு அம்மாநில கிரிக்கெட் நிர்வாகத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை உணர்த்தும் போர்டுகள், போஸ்டர்கள், பேனர்கள் மற்றும் பெயரை எழுதும் எந்தவித மார்க்கரோ, பேனாவோ எடுத்து வரக்கூடாது என்றும் மேலும் எந்தவொரு செயல்பாட்டையும் போஸ்டராக வெளிக்காட்டக் கூடாது என்று தடை விதித்துள்ளது.

இதற்கு காரணம் யாதெனில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அசாம் மாநிலத்தில் தற்போது கடுமையான போராட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. அதனால் இன்றைய போட்டியில் ரசிகர்களின் செயல்பாடுகளை கட்டுக்குள் வைக்கவே மைதான நிர்வாகம் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது. போட்டி திட்டமிட்டபடி சரியாக நடப்பதற்காகவே ரசிகர்களுக்கான இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

fans 1

மேலும் மைதானத்திற்குள் செல்போன், கார் சாவி, பைக் சாவி மற்றும் பர்ஸ் ஆகியவை மட்டுமே எடுத்து வர அதிக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பேசிய அம்மாநில கிரிக்கெட் நிர்வாகியான சர்க்கார் கூறுகையில் : சர்வதேச கிரிக்கெட் போட்டி என்பதால் அனைவரும் விழிப்புடன் இருந்து வருகிறோம். தேவையான போலீஸ் பாதுகாப்பு மைதானத்தில் பலப்படுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -

fans 2

இந்த போட்டியை காணவரும் ரசிகர்கள் இந்த போட்டியில் போஸ்டர்கள், பேனர்கள், மார்க்கர் மற்றும் பேனா என எதையும் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த போட்டியை காண 27 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன என்றும் ரசிகர்களின் ஆதரவு இந்த போட்டிக்கு அதிகரித்து உள்ளது என்றும் அவர் தெரிவித்து குறிப்பிடத்தக்கது.