திட்டமிட்டபடி இன்று இந்தியா தென்னாபிரிக்கா டி20 போட்டி நடைபெறாது – அதிர்ச்சி தகவல் இதோ

IND-vs-SA
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று தர்மசாலா மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், டிகாக் தலைமையிலான தென்னாபிரிக்க அணிகளும் மோதுகின்றன. இந்த போட்டி இரவு 7 மணிக்கு துவங்க உள்ளது.

Rain

- Advertisement -

இந்நிலையில் இன்றைய போட்டி திட்டமிட்டபடி நடைபெற வாய்ப்பு இருக்காது என்று கருதப்படுகிறது. ஏனெனில் இன்றைய போட்டி மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது என்று வானிலை அறிக்கை தகவல் வெளியாகி உள்ளது. ஏனென்றால் தர்மசாலாவில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது.

எனவே மைதானத்தில் ஈரப்பதம் இன்னும் இருக்கிறது. மேலும் இன்றும் மழை வர வாய்ப்பு இருப்பதால் போட்டியில் மழையின் குறுக்கீடு அதிகமாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது. இரு நாட்களாக மழை பெய்து வருவதால் இந்திய அணி வலைப்பயிற்சியையும் ரத்து செய்தது. அதனால் இன்றைய போட்டி நடப்பது சற்று சந்தேகம்தான் அப்படியே நடந்தாலும் மழையின் காரணமாக ஓவர்கள் குறைக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகிஉள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement