தெ.ஆ அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு – அதிகாரபூர்வ தகவல் இதோ

kohli
- Advertisement -

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரை முடித்து அடுத்து அந்த அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாளை அக்டோபர் 2ஆம் தேதி துவங்க உள்ளது.

IND

- Advertisement -

இந்நிலையில் நாளை துவங்க உள்ள இந்த போட்டிக்கான இந்திய அணி தற்போது தயாராகிவிட்டது இதனை விராட் கோலி தற்போது வெளியிட்டுள்ளார். அதன்படி இந்திய அணியில் சில மாற்றங்களை விராட்கோலி கொண்டுவந்துள்ளார். அதில் குறிப்பிட்டவை காயத்தின் காரணமாக பும்ரா வெளியேறியதால் இந்தத் தொடரில் உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பளிக்கப்படவில்லை.

நாளைய போட்டியின் அதிகாரபூர்வ அணியின் விவரம் இதோ : கோலி (கேப்டன்) ரஹானே (துணை கேப்டன்) அகர்வால், ரோஹித், புஜாரா, விகாரி, ஜடேஜா, அஸ்வின், சஹா, இஷாந்த் சர்மா மற்றும் ஷமி இந்த 11 பேரே நாளைய போட்டியில் விளையாடுவார்கள் என்று அதிகாரபூர்வமாக கோலி இன்று அறிவித்தார்.

ASHWIN

இந்த போட்டியின் சிறப்பம்சம் யாதெனில் சமீபகாலமாக பல போட்டிகளில் புறக்கணிக்கப்பட்ட தமிழக பந்து வீச்சாளரான அஸ்வின் இந்த போட்டியில் விளையாட உள்ளதால் அவர் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அஸ்வின் நாளைய போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement