IND vs RSA : கோப்பையை வெல்ல தொடரை சமன் செய்யுமா இந்தியா, 3வது போட்டி நடக்கும் ராஜ்கோட் மைதானம் எப்படி, பிட்ச் – வெதர் ரிப்போர்ட் இதோ

Rajkot Cricket Stadium
Advertisement

இந்தியா தனது சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பங்கேற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் விறுவிறுப்பான உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கேப்டன் ரோகித் சர்மா ஓய்வெடுக்கும் இந்த தொடரில் பொறுப்புடன் செயல்பட வேண்டிய இந்திய அணியினர் முதல் 2 போட்டிகளில் பேட்டிங் – பந்து வீச்சில் மொத்தமாக சொதப்பி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து தலைகுனிவுக்கு உள்ளானது. அதனால் 2 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்த இந்தியா ஜூன் 14இல் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற வாழ்வா – சாவா என்ற 3-வது போட்டியில் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அதனால் சற்று நிம்மதி அடைந்தாலும் இத்தொடரில் இன்னும் 2 – 1* (5) என்ற கணக்கில் பின்தங்கியுள்ளதால் அடுத்ததாக நடைபெறும் 2 போட்டிகளிலும் வென்றால் மட்டுமே சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் தலை நிமிர்ந்து நடக்க முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. முதல் 2 போட்டிகளில் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் கோட்டைவிட்ட இந்தியா 3-வது போட்டியில் பொறுப்புடன் அதை கச்சிதமாக செய்து வெற்றி பாதைக்கு திரும்பியது.

- Advertisement -

மறுபுறம் இன்னும் ஒரு போட்டியில் வென்றாலே வலுவான இந்தியாவை சொந்த மண்ணில் மண்ணை கவ்வ வைத்து விடலாம் என்ற நம்பிக்கையில் தென் ஆப்பிரிக்கா கடும் சவாலை கொடுத்து கோப்பையை வெல்ல போராட உள்ளது. எனவே எஞ்சிய 2 போட்டிகளிலும் அதே வெற்றி நடை போட்டு தென் ஆப்பிரிக்காவிடம் மண்டியிடாமல் ரிஷப் பண்ட் தலைமையிலான இந்தியா கோப்பையை வென்று காட்டுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

IND vs RSA Chahal Axar Patel

ராஜ்கோட் மைதானம்:
இந்த நிலைமையில் இந்த தொடரின் முக்கியமான 4-வது போட்டி ஜூன் 17இல் குஜராத்தில் உள்ள ராஜ்கோட் நகரில் இருக்கும் சௌராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் இரவு 7 மணிக்கு துவங்க உள்ளது. இப்போட்டியை முன்னிட்டு இந்த மைதானத்தை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

1. கடந்த 2009இல் துவங்கப்பட்ட இந்த மைதானம் 28,000 ரசிகர்கள் ஒன்றாக அமர்ந்து நேரிடையாக பார்க்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

2. இந்த மைதானத்தில் வரலாற்றில் இதுவரை 2 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் 2 முறை சேசிங் செய்த அணிகள் வென்றுள்ளன. 1 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அணி வென்றது.

- Advertisement -

3. இங்கு கடந்த 2013இல் முதல் முறையாக நடைபெற்ற டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு அந்த அணி நிர்ணயித்த 202 ரன்கள் இலக்கை துரத்திய இந்தியாவுக்கு நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் 8 பவுண்டரி 5 சிக்சருடன் 77* (35) ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்.

4. இருப்பினும் கடந்த 2017இல் நியூசிலாந்துக்கு எதிராக அந்த அணி நிர்ணயித்த 192 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக எட்டிப்பிடிக்க முடியாத இந்தியா 40 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

- Advertisement -

5. கடைசியாக கடந்த 2019இல் இங்கு நடைபெற்ற போட்டியில் வங்கதேசம் நிர்ணயித்த 153 ரன்கள் இலக்கை கேப்டன் ரோகித் சர்மா 85 (43) ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார். எனவே இங்கு பங்கேற்ற 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பதிவு செய்துள்ள இந்தியா முதல் முறையாக இம்முறை தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்வதால் கவனத்துடன் விளையாட வேண்டியுள்ளது.

பிட்ச் ரிப்போர்ட்:
டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வகையான கிரிக்கெட்டிலுமே இந்த சௌராஷ்டிரா மைதானம் வரலாற்றில் பேட்டிங்க்கு சாதகமான ஒன்றாகவே இருந்து வருகிறது. இங்குள்ள பிட்ச் பொதுவாகவே பிளாட்டாக காணப்படுவதால் வரலாற்றில் இங்கு நடைபெற்ற பெரும்பாலான போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தி ரன் மழை பொழிந்துள்ளார்கள்.

அதிலும் டி20 கிரிக்கெட்டில் 2 இன்னிங்சிலும் பெரிய ரன்களை எடுக்க உதவும் இந்த மைதானம் ரசிகர்களுக்கு விருந்தையும் பவுலர்களுக்கு சற்று கடினத்தையும் அளித்து வருகிறது. இந்த மைதானத்தின் சராசரி முதல் இன்னிங்ஸில் 183 என்பதிலிருந்தே அதைப் புரிந்து கொள்ள முடியும். இருப்பினும் மிடில் ஓவர்களில் இங்கு சுழல் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தலாம். மேலும் புதிய பந்தை ஸ்விங் செய்து திறமையை வெளிப்படுத்தும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு விக்கெட்கள் கிடைக்காமல் இருக்காது. வரலாற்றில் இங்கு 2 முறை சேசிங் செய்த அணிகள் வெற்றி பெற்றதாலும் இது இரவு நேர போட்டி என்பதாலும் டாஸ் வெல்லும் கேப்டன் யோசிக்காமல் முதலில் பந்து வீச தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

INDvsRSA

வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் ராஜ்கோட் நகரில் போட்டி நாளன்று 20% மழைக்கான வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது. இருப்பினும் மழையின் குறுக்கீடி இல்லாமல் முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.

Advertisement