ஸ்டார், சோனி கிடையாது.. இந்தியா – தெ.ஆ டி20 தொடரை எந்த சேனலில் பார்க்கலாம்? அட்டவணை இதோ

IND vs RSA
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு தென்னாபிரிக்காவுக்கு எதிராக இந்தியா 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. கடைசியாக அந்த 2 அணிகளும் 2024 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் மோதின. அதில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்த ரோஹித் தலைமையிலான இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.

அந்தப் போட்டிக்கு பின் அதே அணிகள் இந்த தொடரில் மோதுவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்முறை சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இளம் வீரர்களுடன் தென்னாப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. மறுபுறம் ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி ரபாடா போன்ற சில முக்கிய வீரர்கள் இல்லாமல் இத்தொடரில் விளையாட உள்ளது.

- Advertisement -

அட்டவணை விவரம்:

எனவே டி20 உலகக் கோப்பை ஃபைனலில் சந்தித்த தோல்விக்கு இந்த தொடரில் இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா வெற்றி பெற போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு பதிலடி கொடுத்து தென்னாபிரிக்காவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியும் தயாராகியுள்ளது. சொல்லப்போனால் 2023 டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 தொடரை சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வென்றது.

இம்முறை நடைபெறும் டி20 தொடரின் அட்டவணை பின்வருமாறு (இந்திய நேரப்படி):
முதல் போட்டி: நவம்பர் 8, இரவு 8.30, டர்பன்
2வது போட்டி: நவம்பர் 10, இரவு 7.30, கிபர்ஹா
3வது போட்டி: நவம்பர் 13, இரவு 8.30, சென்சூரியன்
4வது போட்டி: நவம்பர் 15, இரவு 8.30, ஜோன்ஸ்பர்க்

- Advertisement -

எந்த சேனல்:

பொதுவாக இந்திய அணி விளையாடும் தொடர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் அல்லது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுவது வழக்கமாகும். ஆனால் இந்தத் தொடரை இந்தியாவில் உள்ள ரசிகர்கள் தொலைக்காட்சியில் ஸ்போர்ட்ஸ்18 சேனலில் நேரலையில் கண்டு களிக்கலாம். அதே போல மொபைலில் ஜியோ சினிமா சேனல் வாயிலாக இந்த தொடர் நேரலையில் ஒளிபரப்பப்பட உள்ளது.

இதையும் படிங்க: அதுக்குள்ள பழசை மறந்து அவங்கள ரிட்டையராக சொல்லாதீங்க.. இதை செய்லனா சொல்லுங்க.. டிகே பேட்டி

வரலாற்றில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மொத்தம் 27 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்திய அணி 15 வெற்றிகளை பெற்று முன்னிலையில் இருக்கிறது. தென்னாப்பிரிக்க அணி 11 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. எஞ்சிய போட்டிகள் மழையால் கைவிடப்பட்டன.

Advertisement