டி20 உலகக்கோப்பை இந்தியா பாகிஸ்தான் போட்டிகளுக்கான பாதுகாப்பு அதிகரிப்பு – என்ன காரணம்

IND-vs-PAK
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-யின் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது ஜூன் 1-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கிறது. இதுவரை 8 முறை டி20 உலக கோப்பை தொடரானது நடைபெற்றுள்ள வேளையில் ஒன்பதாவது தொடரானது ஜூன் 1-ஆம் தேதி துவங்குகிறது.

இந்த மாபெரும் டி20 உலக கோப்பை தொடரில் மொத்தமாக 20 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கின்றன. இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

- Advertisement -

இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் 20 அணிகளும் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த தொடரில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளுடன் மோத இருக்கிறது.

அதன்படி இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் ஜூன் 5-ஆம் தேதி அயர்லாந்து அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது. அதன் பின்னர் உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜூன் 9-ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டிக்கான பாதுகாப்பு தற்போது மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏனெனில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் டி20 உலக கோப்பை தொடரின் போது பயங்கரவாத சம்பவங்கள் நடைபெறும் என மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

இதையும் படிங்க : விராட் கோலிக்கும் இந்தியாவுக்கு வாய்ப்பில்லை.. 2024 டி20 உ.கோ ஃபைனல் அணிகள் பற்றி நேதன் லயன் கணிப்பு

இதன் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் பாதுகாப்பை நியூயார்க் நகர நிர்வாகம் அதிகரித்துள்ளது. மேலும் போட்டியை காண வரும் அனைவருக்கும் கடுமையான சோதனைகளும் இருக்கும் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement