வெறும் 5 நிமிடத்தில் விற்று தீர்ந்த உலககோப்பை டிக்கெட்டுகள் – எந்த போட்டிக்கு தெரியுமா?

Cup
- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற உள்ளது. வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், சிட்னி உள்ளிட்ட 7 முக்கிய நகரங்களில் நடைபெறும் இந்த உலக கோப்பையில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றுகள் என மொத்தம் 45 போட்டிகள் நடைபெற உள்ளன.

2007 t20 worldcup

- Advertisement -

இதில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட உலகின் டாப் அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளதால் இந்த தொடருக்காக ரசிகர்கள் இப்போது முதலே ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இந்தியா – பாகிஸ்தான்:
இந்த உலக கோப்பையில் கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் வரும் அக்டோபர் 27ஆம் தேதியன்று உலகப் புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நேருக்கு நேர் மோத உள்ளன. கிரிக்கெட்டில் இந்த 2 அணிகள் மோதும் சாதாரண போட்டிகள் என்றாலே அதில் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

அத்தகைய நிலையில் இவ்விரு அணிகள் மோதும் உலகக் கோப்பை போட்டிகள் என்றால் அதில் எப்போதுமே அனல் பறக்கும் என்றே கூறலாம். குறிப்பாக சமீப காலங்களாக இரு நாடுகள் இடையே நிலவும் எல்லைப் பிரச்சினைகள் காரணமாக இவ்விரு அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதில்லை. மாறாக ஐசிசி நடத்தும் உலகக் கோப்பைகளில் மட்டும் இந்த 2 அணிகளும் மோதி வருகின்றன என்பதால் இந்தியா பாகிஸ்தான் மோதும் உலகக் கோப்பை போட்டிக்கு முன்பை விட பல மடங்கு மவுசு கூடியுள்ளது.

- Advertisement -

5 நிமிடத்தில் தீர்ந்த டிக்கெட்:
இந்நிலையில் ஐசிசி டி20 உலக கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நேற்று துவங்கியது. இதில் பொது டிக்கெட் பிரிவின் அடிப்படையில் 2 லட்சம் டிக்கெட்டுகள் நேற்று ஆன்லைனில் விற்கப்பட்டன. அதில் ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகளின் விற்பனை துவங்கிய வெறும் 5 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்து போனதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

T20

அது மட்டுமல்லாமல் இதே உலக கோப்பையில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா பங்கேற்கும் போட்டியின் டிக்கெட்டுகளும் உடனடியாக விற்றுத் தீர்ந்தன. இந்த போட்டியை சுமார் 90,000 ரசிகர்கள் கண்டுகளிக்க உள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல் சிட்னி மைதானத்தில் இந்தியா பங்குபெறும் ஒரு போட்டிக்கான டிக்கெட்டுகளும் துவங்கிய ஒரு சில மணி நேரங்களில் விற்று தீர்ந்தன.

பழி தீர்க்குமா இந்தியா:
கடைசியாக ஆஸ்திரேலிய மண்ணில் கடந்த 2015ஆம் ஆண்டு அடிலைட் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய உலக கோப்பை போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அதன்பின் தற்போது தான் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக இந்த 2 அணிகளும் ஒரு டி20 உலக கோப்பையில் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல இந்தியாவும் பாகிஸ்தானும் கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு துபாயில் நடந்த டி20 உலக கோப்பை தொடரில் மோதின. அதில் விராட் கோலி தலைமையிலான இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடையச் செய்த பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியாவை ஒரு உலக கோப்பை போட்டியில் மண்ணை கவ்வ செய்து சரித்திரம் படைத்தது.

INDvsPAK

இதனால் இந்தியாவும் இந்திய ரசிகர்களும் தலை குனியும் பரிதாப நிலை ஏற்பட்டது. ஆனால் தற்போது இந்தியா டி20 அணியின் புதிய கேப்டனாக 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மா பொறுப்பை ஏற்றுள்ளார். எனவே வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெறும் உலக கோப்பை போட்டியில் மீண்டும் தோற்கடித்து கடந்த வருடம் பரிசளித்த தோல்விக்கு பரம எதிரியான பாகிஸ்தானை பழி தீர்க்குமா என இந்திய ரசிகர்கள் இப்போட்டிக்காக இப்போது முதலே ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Advertisement