டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் : இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு துவங்குகிறது தெரியுமா ? – எந்த சேனலில் பார்க்கலாம் ?

INDvsNZ
- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்காக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை அறிமுகப்படுத்தியது ஐசிசி. அதன்படி கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடரின் இறுதிப் போட்டியானது வருகிற 18ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள ஏஜஸ் பவுல் மைதானத்தில் நடைபெற இருக்கின்றது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இரண்டு இடங்களைப் பிடித்த இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் இந்த இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கின்றன. கிரிக்கெட் வராலாற்றிலேயே முதல் முறையாக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் நடைபெறுவதால், இந்த இறுதிப் போட்டியானது கிரிக்கெட் உலகில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

INDvsNZ

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி எந்த சேனலில் ஒளிபரப்பாகும் என்றும் இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு துவங்கும் என்றும் எந்தவித அறிவிப்பும் வெளியாகாமல் இருந்ததால் , இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இதுகுறித்து குழப்பத்தில் இருந்து வந்தனர். அந்த குழப்பத்தினை தீர்க்கவே நாங்கள் இந்த தகவலினை உங்களக்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

அதன்படி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியை இந்தியாவில் ஒளிபரப்பு செய்யும் உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பெற்றிருக்கிறது. ஆங்கிலம் உட்பட இந்திய மொழிகளான தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மொத்தம் ஆறு மொழிகளில் போட்டி ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

starsport

மேலும் வருகிற 18ஆம் தேதியன்று இந்திய நேரப்படி சரியாக மாலை 3.30 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகும் என்றும், மாலை 3 மணியிலிருந்து நேரலை துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஹாட்ஸ்டார் மற்றும் டிஷ்னியிலும் இந்த போட்டியை ரசிகர்கள் நேரலையாக காணலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

IND

இந்த இறுதிப் போட்டியில் பங்கு பெறுவதற்காக இங்கிலாந்திற்கு கடந்த 2ஆம் தேதி புறப்பட்டு சென்ற இந்திய வீரர்கள், மூன்று நாட்கள் தனிமை முகாமை முடித்துவிட்டு தற்போது மைதானங்களில் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இறுதிப் போட்டிக்குத் தகுதிப் பெற்றிருக்கும் மற்றொரு அணியான நியூசிலாந்து, தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அந்த தொடரின் முதல் போட்டி ட்ராவில் முடிவடைந்துள்ள நிலையில், கடைசி மற்றும் இரண்டாவது போட்டி வருகிற 10ஆம் தேதி துவங்கப்பட உள்ளது.

Advertisement