- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தொடர்ந்து மழை பெய்தால் என்ன செய்ய வேண்டும்? ரோஹித் சர்மா எடுக்கப்போகும் முடிவு? – விவரம் இதோ

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது இன்று அக்டோபர் 16-ஆம் தேதி துவங்க இருந்தது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த முதலாவது போட்டி பெங்களூரு மைதானத்தில் துவங்க இருந்த வேளையில் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்கு போட்டி துவங்க வேண்டியிருந்தது.

ரோஹித் சர்மாவின் முடிவு என்ன? :

ஆனால் மதியநேரம் தாண்டியும் இந்த போட்டி மழை காரணமாக இதுவரை துவங்காமல் இருந்து வருகிறது. மேலும் பெங்களூரில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக முதல் நாள் ஆட்டம் நடைபெறுமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அதோடு போட்டியின் இரண்டாம் நாளுக்கும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக இந்த முதலாவது டெஸ்ட் போட்டி முழுவதுமாக நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் ஒருவேளை இந்திய அணி டாஸ் வென்றால் என்ன செய்ய வேண்டும்? ரோகித் சர்மா என்ன முடிவு எடுக்க வேண்டும்? என்பது குறித்த தகவலை இங்கு காணலாம்.

அதன்படி தற்போது பெங்களூரில் குளிர்ந்த கால சூழ்நிலை நிலவுகிறது. இதன் காரணமாக வானம் மேகமூட்டத்துடன் இருப்பதினால் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்திய அணியில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் தேவையில்லை என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது.

- Advertisement -

ஏனெனில் இந்த மைதானத்தில் மழைக்கு பிறகு சுழற்பந்து வீச்சு எடுபடாது. இதன் காரணமாக ஒரு சுழற்பந்து வீச்சாளரை அணியில் வைத்துக்கொண்டு நான்கு வேகப்பந்து வீச்சாளுடன் விளையாடலாம் என்பதே நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனாலும் ரோஹித் சர்மா போட்டியின் சூழலை கணக்கில் கொண்டே முடிவெடுப்பார் என்பதனால் அவரது முடிவு என்னவாக இருக்கும்? என்று தெரியவில்லை.

இதையும் படிங்க : தோனியை சி.எஸ்.கே அணி இப்படித்தான் தேர்வு செய்ய வேண்டும்.. ரிடென்ஷன் முடிவு பற்றி – அஷ்வின் பேச்சு

ஆனாலும் இந்திய அணி இந்த போட்டியில் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் சென்றால் நிச்சயம் விரைவில் விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியை கட்டுக்குள் கொண்டுவர முடியும். அதேபோன்று முதலில் பேட்டிங் செய்யும் பட்சத்தில் குறைந்தது 250 ரன்கள் அடிக்க வேண்டும் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -