இந்தியா – நியூஸி 3வது ஒன்டே நடைபெறும் கோட்டை இந்தூர் மைதானம் எப்படி? புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

Indore Stadium
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி 2026 புத்தாண்டில் முதலாவதாக நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியாவை 2வது போட்டியில் தோற்கடித்த நியூசிலாந்து பதிலடி கொடுத்தது. அதனால் சமநிலையில் இருக்கும் அத்தொடரின் 3வது போட்டியில் வென்று கோப்பையை வெல்ல 2 அணிகளும் தயாராகியுள்ளன.

அதனால் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்க்க ஏற்படுத்தியுள்ள 3வது போட்டி மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 1.30 துவங்கி நடைபெற உள்ளது. 2006இல் தோற்றுவிக்கப்பட்ட இம்மைதானம் 30000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இங்கு வரலாற்றில் நடைபெற்ற 7 ஒருநாள் போட்டிகளிலும் இந்தியா விளையாடியுள்ளது.

- Advertisement -

இந்தூர் மைதானம்:

ஆச்சரியப்படும் வகையில் அந்த 7 போட்டிகளிலும் 7 வெற்றிகளைப் பெற்றுள்ள இந்திய அணிக்கு இந்தூர் மைதானம் கோட்டையாக திகழ்கிறது என்று சொல்லலாம். குறிப்பாக 2023இல் இங்கே நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய போட்டியில் இந்தியா 90 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதே போல இப்போட்டியிலும் வென்று தொடரை வெல்ல இந்திய அணி முழுமூச்சுடன் முயற்சிக்கும் என்று நம்பலாம்.

வெதர் ரிப்போர்ட்:

இந்தூரில் ஜனவரி 18ஆம் தேதி மழை பெய்வதற்கான வாய்ப்பில்லை என்று இந்திய வானிலை மையத்தின் அறிக்கை தெரிகிறது. வெப்பம் சராசரியாக 14 – 28 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:

இந்தூர் மைதானத்தின் பிட்ச் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சாதகமாக இருந்து வருகிறது. இங்குள்ள பிட்ச்சில் நல்ல வேகம், பவுன்ஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைப் பயன்படுத்தி சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாடும் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிப்பதற்கு வாய்ப்புள்ளது.

அதே சமயம் புதிய பந்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் வழக்கமான தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். மிடில் ஓவர்களில் துல்லியமாக பந்து வீசும் ஸ்பின்னர்கள் விக்கெட்டுகளை எடுப்பார்கள். வரலாற்றில் இங்கே நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 332.

இதையும் படிங்க: கடவுள் இருக்கான் குமாரு.. கம்பீர், அகர்கரின் அநியாயத் தேர்வை உடைத்த விதி.. வீணாகாத ஸ்ரேயாஸ் உழைப்பு

இங்கே 3 முறை 250 – 299 ரன்களும், 3 முறை 300+ ரன்களும் அடிக்கப்பட்டுள்ளன. இங்கே வரலாற்றில் நடைபெற்ற 7 போட்டிகளில் 5 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளும் 2 முறை சேசிங் செய்த அணிகளும் பெற்றுள்ளன. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து 300க்கும் மேற்பட்ட ரன்கள் அடிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement