ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஏமாற்றத்தை சந்தித்த இந்தியா அடுத்ததாக நியூசிலாந்துக்கு பயணித்துள்ளது. அதில் முதலாவதாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை மழைக்கு மத்தியில் ஹர்திக் பாண்டியா தலைமையில் 1 – 0 என்ற கணக்கில் கோப்பையை வென்று தன்னை உலகின் நம்பர் ஒன் டி20 அணி என்பதை நிரூபித்த இந்தியா அடுத்ததாக ஷிகர் தாவான் தலைமையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 2023 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டியில் 306 ரன்களை ரன்களை குவித்தும் ஆரம்பத்திலேயே நியூசிலாந்தின் 3 விக்கெட்டுகளை எடுத்தும் கடைசி 30 ஓவரில் லாதம் – வில்லியம்சன் ஜோடியை பிரிக்க முடியாமல் பந்து வீச்சில் சொதப்பிய இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது.

அதனால் 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே பின் தங்கியுள்ள இத்தொடரை வெல்வதற்கு எஞ்சிய போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ள இந்தியா நவம்பர் 27ஆம் தேதியன்று நடைபெறும் 2வது போட்டியில் வாழ்வா – சாவா சூழ்நிலையில் களமிறங்குகிறது. முதல் போட்டியில் பேட்டிங்கில் 30 – 40 எக்ஸ்ட்ராவாக எடுக்க தவறியதுடன் பந்து வீச்சில் கடைசியில் மொத்தமாக சொதப்பிய இந்தியா தோல்வியில் சந்தித்த கற்ற பாடங்களை திருத்திக் கொண்டு இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்டு தொடரை சமன் செய்ய போராட உள்ளது.
மீண்டும் வருணபகவான்:
மறுபுறம் முதல் போட்டியில் வென்று புத்துணர்ச்சி அடைந்துள்ள நியூசிலாந்து இப்போட்டியிலும் வென்று தொடரை இந்த ஒருநாள் தொடரை கைப்பற்றி சொந்த மண்ணில் டி20 தொடரில் சந்தித்த தோல்விக்காக இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க தயாராகியுள்ளது. அப்படி 2 அணிகளும் வெற்றி வாகை சூடுவதற்கு பலப்பரீட்சை நடத்தும் இப்போட்டி நவம்பர் 27ஆம் தேதியன்று இந்திய நேரப்படி காலை 7:00 மணிக்கு ஹமில்டன் நகரில் இருக்கும் செடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

ஆனால் இப்போட்டியில் இரு அணி வீரர்களை போலவே மழையும் தனது திறமையை காட்டி விளையாடுவதற்கு தயாராகி வருகிறது. முன்னதாக இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நடந்த டி20 தொடரின் 3 போட்டிகளிலும் தவறாமல் கலந்து கொண்டு 3வது போட்டியை அபூர்வமாக சமன் செய்த மழை இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் விலகியிருந்தாலும் இப்போட்டிக்கு மீண்டும் வருகிறது. ஏனெனில் போட்டி நடைபெறும் 27ஆம் தேதியன்று ஹமில்டன் நகரில் சராசரியாக 50% மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக நியூசிலாந்து வானிலை மையம் தெரிவிக்கிறது.
குறிப்பாக உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு 76% என்ற அளவில் இருக்கும் மழைக்கான வாய்ப்பு போட்டி துவங்கும் நேரமான மதியம் 1 மணி அளவில் இடியுடன் கூடிய மழையாக 98% அதிகரிக்கும் என்று வானிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த சமயங்களில் 15 – 20 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுடன் 1.6 முதல் 3.9 மில்லி மீட்டர் மழை பெய்யும் என்று தெரிகிறது. இருப்பினும் நேரம் செல்ல செல்ல 84%, 89%, 84%, 65%, 45%, 37%, 24% என படிப்படியாக குறையும் மழை இரவு 9 மணிக்கு மேல் முற்றிலுமாக நின்று விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அதற்குள் 70 – 80% போட்டி நேரமும் ஓவர்களும் முடிந்து விடும் என்பதால் இப்போட்டி முழுமையாக நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் மாலை நேரத்திற்கு மேல் மழை குறையும் என்று தெரிய வருவதால் இப்போட்டி தாமதமாக துவங்ககி ஓவர்கள் குறைக்கப்பட்டு நடைபெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க : IND vs NZ : இரண்டாவது போட்டி நடைபெறும் செடன் பார்க் மைதானம் எப்படி – பிட்ச் ரிப்போர்ட் இதோ
ஒருவேளை மாலை நேரத்திற்கும் மேல் மீண்டும்தொடர்ந்து மழை பெய்தால் வேறு வழின்றி இப்போட்டி ரத்து செய்யப்படும் நிலைமை ஏற்படலாம். இருப்பினும் நியூசிலாந்தில் அவ்வப்போது வானிலை திடீரென்று மாறக் கூடியது என்ற நிலைமையால் இப்போட்டி முழுமையாக நடைபெற விட்டாலும் ஓவர்கள் குறைக்கப்பட்டு முடிவு காணும் வகையில் நடைபெறும் என்று உறுதியாக ரசிகர்கள் நம்பலாம்.



